விவசாயம் சார்ந்த சமூக பணிக்கு, முனைவர் பட்டம் பெறலாம் என, திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி பொறியியல் பட்டதாரியான இயற்கை பண்ணை விவசாயி எம்.பாரதி கூறியதாவது:
எனக்கு சொந்தமான, கூழாங்கல் நிலத்தில், விவசாயம் செய்ய முடியாது என, பலர் கூறியதுண்டு.
இந்நிலத்திலும், எலுமிச்சை, மா, பலா, கொய்யா உள்ளிட்ட பல வித பழச்செடிகளை நட்டு, வருவாய் ஈட்டி வருகிறேன்.
குறிப்பாக, குறைந்த தண்ணீரில் விவசாயம் செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறேன்.
ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை தெளிப்பு நீர் பாசன கருவி மூலமாக பாய்ச்சி வருகிறேன். மேலும், செயல் வழிகற்றலுக்கு வரும் மாணவ----- --- மாணவியருக்கு இலவச பயிற்சிகளை அளித்து வருகிறேன்.
என்னுடைய சமூக செயல்பாடுகளை பாராட்டி ஜெர்மனியைச் சேர்ந்த சேன்ஸ்கிரிட் ஏசியன் யோகா பல்கலை கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இது, புதுமையான விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.
விவசாயத்திலும், முனைவர் பட்டம் பெறலாம் என, என்னை தகுதி வளர்த்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எம்.பாரதி.
93805 33376
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!