கடல் தாண்டிய தமிழர்கள், பல தரப்பட்ட மக்களுடன் வசிப்பவர்கள், தலைமுறைகள் மாறியும் பொங்கலை கொண்டாடுகின்றனர். மதுரையை சேர்ந்த சுகந்தி ஜெர்மனியில் நியூரன்பெர்க் நகரில் 22 ஆண்டுகளாக வசிக்கிறார். அவரது 'ஐஸ்' பொங்கல் அனுபவம் பற்றி...
''ஜனவரியில் ஐஸ் மழையும், பனிப்புயலும் வீசுவதால். கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் கிடைக்காது. கரும்பு படத்தை வரைந்து கொள்வர்.
விரலி மஞ்சளுக்கு பதில் மஞ்சள் பொடியை நுாலில் தோய்த்து வைத்துக் கொள்வர். பெயின்ட் அடிக்க, கோலமிட, விறகு அடுப்பில் பொங்கலிட அனுமதி இல்லை. பொங்கல் பொங்கும் போது குலவை இட முடியாது. வீட்டுக்குள்ளேயே பொங்கலிடுவோம். அதிலும் சிக்கல் உள்ளது. கடுங்குளிரால் எவ்வளவு வெப்பமூட்டினாலும் பால் பொங்காது. அடுத்த தலைமுறையினருக்கு நம் கலாசாரம் தெரிய வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பொங்கலிடுகிறோம்.
தமிழ்ச்சங்கம் நடத்தும் விழாவில் மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாட்டிய நிகழ்ச்சி நடக்கும். கவிதை, கட்டுரை, பாடல் போட்டிகள் நடத்துவர். ஆங்கிலேயரும் பங்கேற்பர். அன்றைய நாளில் உறவும், உணர்வும் நம்மண்ணின் மகிமையால் பொங்கி வழியும்.
தொடர்புக்கு: suganthiravendranath@gmail.com
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!