Load Image
Advertisement

2022ல் விளையாட்டு

ஜனவரி
ஜன. 5: கொரோனா தடுப்பூசி செலுத்தாத செர்பிய வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பங்கேற்க அனுமதி மறுப்பு. கோர்ட் உத்தரவின் படி திருப்பி அனுப்பப்பட்டார்.
ஜன.9: அடிலெய்டு டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் போபண்ணா, ராம்குமார் ஜோடி சாம்பியன்.
ஜன.16: இந்திய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர், இரட்டையரில் இந்தியாவின் லக்சயா சென், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி கோப்பை வென்றது.

ஜன.23: சையது மோடி பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிந்து சாம்பியன்.
ஜன.29: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், பெண்கள் ஒற்றையரில் கோப்பை வென்றார் உள்ளூர் வீராங்கனை ஆஷ்லே பார்டி.
'கிங்' நடால்: ஜன.30: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கோப்பை வென்ற ஸ்பெயினின் நடால், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 21 கோப்பை கைப்பற்றிய முதல் வீரர் என வரலாறு படைத்தார். இடம்: மெல்போர்ன்

பிப்ரவரி
'ஜூனியர்' உலக சாம்பியன்: பிப்.5: 'ஜூனியர்' உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் (19 வயது, வெஸ்ட் இண்டீஸ்) இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி ஐந்தாவது முறையாக கோப்பை வென்றது.
பிப்.6: இந்திய அணி ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் (ஆமதாபாத்) பங்கேற்றது. இதில் வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பிப்.21: 'ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ்' ஆன்லைன் செஸ் தொடரில் உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சனை முதல் முறையாக வீழ்த்தினார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.
பிப்.22: தேசிய பல்கலை., தடகள போட்டியில் டுட்டீ சந்த் (100 மீ., ஓட்டம்) தங்கம்.
பிப்.25: புரோ கபடி 8வது சீசனில் டில்லி அணி, பாட்னாவை சாய்த்து, கோப்பை வென்றது.
பிப்.28: துருக்கி மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தங்கம் வென்றார்.

மார்ச்
'சுழலும்' நினைவுகள்: மார்ச்4: விடுமுறைக்காக தாய்லாந்து சென்ற ஆஸ்திரேலிய 'சுழல் ஜாம்பவான்' ஷேன் வார்ன் 52, மாரடைப்பால் காலமானார். இவர் 145 டெஸ்டில் 708 விக்கெட் வீழ்த்தினார்.
மார்ச்6: இலங்கைக்கு எதிரான மொகாலி டெஸ்டில் 4 விக்கெட் சாய்த்த இந்தியாவின் அஷ்வின் (436 விக்., 85 டெஸ்ட்), டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த கபில்தேவை (434) முந்தினார்.
அசத்திய அன்கிதா-ருடுஜா: மார்ச்12: ஆஸ்திரேலியாவில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் பைனலில் அலெக்சாண்ட்ரோ(ஆஸி.,) போலந்தின் வெரோனிகாவை சாய்த்து, இந்தியாவின் அன்கிதா-ருடுஜா ஜோடி சாம்பியன் ஆனது.
மார்ச்15: ஜோர்டானில் நடந்த ஆசிய யூத் குத்துச்சண்டையில் 15 தங்கம் உட்பட 39 பதக்கங்கள் வென்றது இந்தியா.
புதிய சாதனை: மார்ச்16: இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி, ஒருநாள் அரங்கில் 250 விக்கெட் (199 போட்டி) வீழ்த்திய முதல் வீராங்கனையானார்.
மார்ச்18: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல், தமிழகத்தின் வினி ராமன் திருமணம்.
மார்ச்20: ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி.
*ஐ.எஸ்.எல்., கால்பந்து 8வது சீசனில் கேரளாவை வீழ்த்தி, ஐதராபாத் அணி முதன் முறையாக கோப்பை வென்றது.
மார்ச்22: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஆசிய சாதனையுடன் இந்தியாவின் தரம்பிர் (31.09 மீ.,), வெள்ளி.
மார்ச்24: தோகா, சர்வதேச டேபிள் டென்னிசில் இந்தியாவின் மணிகா, சத்யன் ஜோடிக்கு வெள்ளி கிடைத்தது.
இளம் இந்தியா கலக்கல்: மார்ச்25: இந்தியாவில் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து தொடர் (18 வயது) நடந்தது. வங்கதேசம், நேபாள அணிகளை வீழ்த்திய இந்திய அணி, பட்டியலில் முதலிடம் பிடித்து, முதன் முறையாக கோப்பை வென்றது.
மார்ச்28: ஒலிம்பிக் 'தங்கமகன்', ஈட்டிஎறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு 'பத்ம ஸ்ரீ' விருது.
மார்ச்30: தோஹாவில் நடந்த 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் மணிகா, அர்ச்சனா ஜோடி வெண்கலம்.

ஏப்ரல்
ஏப்.2: ஐ.டி.எப்., டென்னிஸ் (கான்பெரா) பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அன்கிதா, ஆஸ்திரேலியாவின் அரினா ஜோடி கோப்பை வென்றது.
ஏப்.3: நியூசிலாந்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை தொடரில் 7வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்.
ஏப்.4: உலக பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் போலந்தின் ஸ்வியாடெக் 'நம்பர்-1' ஆனார்.
முதல் ஜோடி: ஏப்.9: இங்கிலாந்தில் நடந்த உலக ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சவுரவ் கோஷல், தீபிகா பல்லீகல் ஜோடி தங்கம் வென்றது. இத்தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி இது.
ஏப்.13: ஐஸ்லாந்து செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா கோப்பை வென்றார்.
ஏப்.18: லா ரோடா சர்வதேச செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ் சாம்பியன்.
*டென்மார்க் நீச்சல் தொடரில் இந்தியாவின் வேதாந்த் (800மீ., 'பிரீஸ்டைல்') தங்கம்.
ஏப்.23: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார் இந்தியாவின் ரவிக்குமார் (2020, 2021, 2022).
ஏப்.30: ஆசிய பாட்மின்டனில் இந்தியாவின் சிந்து வெண்கலம்.

மே
மே4: கிரீஸ் செஸ் தொடரில் இந்தியாவின் வைஷாலிக்கு கோப்பை.
மே12: பிரேசில், 'டெப் லிம்பிக்ஸ்' பாட்மின்டனில் தமிழகத்தின் ஜெர்லின் மூன்று தங்கம். கோல்ப் போட்டியில் இந்தியாவின் தீக் ஷா தங்கம்.
மே14: ஆஸ்திரேலிய முன்னாள் 'ஆல் ரவுண்டர்' சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்.
ஆசிய சாதனை: மே15: தாய்லாந்தில் நடந்த தாமஸ் கோப்பை பாட்மின்டன் தொடரில் இந்திய ஆண்கள் அணி கோப்பை வென்றது. 73 ஆண்டில் சாதித்த முதல் ஆசிய அணி என சாதனை படைத்தது.
மே21: போலந்து செஸ் தொடரில் இந்தியாவின் ஆனந்த் சாம்பியன்.
மே24: இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 400மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா தங்கம்.
மே 29: ஐ.பி.எல்., தொடரில் முதன் முறையாக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யாவின் குஜராத் அணி சாம்பியன். பைனலில் ராஜஸ்தானை வென்றது.

ஜூன்
மூன்றாவது கோப்பை: ஜூன் 4: பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் அமெரிக்காவின் கோகோவை வீழ்த்திய போலந்தின் ஸ்வியாடெக், 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.
ஜூன்5: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் நடால், 14வது முறையாக சாம்பியன்.
ஜூன் 8: இந்திய பெண்கள் கிரிக்கெட் 'ஜாம்பவான்' மிதாலி ராஜ் 40, ஓய்வு.
ஜூன்10: நார்வே செஸ் ஓபன் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன்.
ஜூன்12: சென்னை, தேசிய தடகள சாம்பியன்ஷிப் 'போல் வால்ட்' போட்டியில் தமிழக வீரர் சிவா தங்கம்.
ஜூன்14: சென்னை, தேசிய தடகளத்தில், தமிழகம் ஒட்டு மொத்த சாம்பியன் வென்றது.
ஜூன்17: நெதர்லாந்துக்கு எதிராக 498 ரன் குவித்த இங்கிலாந்து, ஒருநாள் போட்டியில் (ஆம்ஸ்டெல்வீன்) அதிக ரன் எடுத்து சாதனை.
ஜூன் 26: ரஞ்சி கோப்பை பைனலில் மும்பையை வென்ற மத்திய பிரதேச அணி, முதன்முறையாக சாம்பியன்.

ஜூலை
ஜூலை2: பர்மிங்காம் டெஸ்டில் இங்கிலாந்தின் பிராட் வீசிய ஒரே ஓவரில், 29 ரன் எடுத்து இந்தியாவின் பும்ரா உலக சாதனை.
ஜூலை9: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் கஜகஸ் தானின் ரிபாகினா சாம்பியன்.
ஜூலை17: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன்.
உலக 'ஹீரோ': ஜூலை23: கனடா, உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை.
ஜூலை31: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம்.
*டி.என்.பி.எல்., பைனலில் மழை குறுக்கிட, கோவை, சேப்பாக்கம் அணிகள் கோப்பை பகிர்ந்து கொண்டன.

ஆகஸ்ட்
'வெள்ளி' நாயகர்கள்: ஆக.2: காமன்வெல்த் ஹாக்கி பைனலில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
புதிய சாதனை: ஆக.2: காமன்வெல்த் விளையாட்டு 'லான் பவுல்ஸ்' போட்டியில் இடமிருந்து லவ்லி, பிங்கி, நயன்மோனி, ரூபா ராணி அடங்கிய இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை.
முதல் இந்தியர்: ஆக.4: காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்தியரானார் தேஜஸ்வின் சங்கர்.
ஆக.5: தெற்காசிய கால்பந்து (20 வயது, இடம்: ஒடிசா) சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி 5-2 என, வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன்.
காமன்வெல்த்தில் அசத்திய இந்திய நட்சத்திரங்கள்: ஆக.2: டேபிள் டென்னிசில் சரத்கமல், சத்யன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கம்.
ஆக.5-6: மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், தீபக் புனியா, ரவி குமார், வினேஷ் போகத் தங்கம்.
ஆக.6: பாரா டேபிள் டென்னிசில் பவினா தங்கம்.
ஆக.7: குத்துச்சண்டையில் அமித் பங்கல், நிகாத் தங்கம்.
*'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் இந்திய வீரர் எல்தோஸ் பால் தங்கம்.
பதக்க மழை: ஆக.7: காமன்வெல்த் விளையாட்டு டேபிள் டென்னிசில் இந்தியாவின் அஜந்தா சரத்கமல் (தமிழகம்), 3 தங்கம், ஒரு வெள்ளி என நான்கு பதக்கம் வென்றார்.
'சிங்கப் பெண்கள்': ஆக.7: காமன்வெல்த் விளையாட்டில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது. இடம்: பர்மிங்காம், இங்கிலாந்து.
இந்தியா 'வெண்கலம்' : ஆக.7: இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. இதில் ஹாக்கியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 16 ஆண்டுக்குப் பின் பதக்கம் (வெண்கலம்) வென்றது.
ஆக.8: டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் சரத் கமல், ஸ்ரீஜா ஜோடி தங்கம். ஒற்றையரில் சரத் கமல் தங்கம்.
*பாட்மின்டன் ஆண்கள் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம்.
*காமன்வெல்த்தில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என, 61 பதக்கம் வென்று பட்டியலில் 4வது இடம்.
சபாஷ் சிந்து: ஆக.8: காமன்வெல்த் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிந்து தங்கம். இடம்: பர்மிங்காம்
ஆக.9: செஸ் ஒலிம்பியாட் 44வது சீசனில் (சென்னை) பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன், நிகால் அடங்கிய இந்திய அணி வெண்கலம்.
*வெஸ்ட் இண்டீசின் போலார்டு, 'டி-20' அரங்கில் 600 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரரானார்.
செஸ் 'ராணிகள்' : ஆக.10: சென்னை, மாமல்லபுர செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய பெண்கள் அணி வெண்கலம் வென்றது.
ஆக.27: இந்தியாவின் நீரஜ் சோப்ரா, டைமண்ட் லீக் தட களத்தில் (சுவிட்சர்லாந்து) தங்கம் வென்ற முதல் இந்தியரானார்.

செப்டம்பர்
செப்.11: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன்.
செப்.12: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன்.
செப்.14: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் (17 வயது, இடம்: இலங்கை) இந்தியா சாம்பியன்.
*உலக மல்யுத்தத்தில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார் வினேஷ் போகத்.
செப்.18: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் செக் குடியரசின் லிண்டா சாம்பியன். இரட்டையரில் கனடாவின் கேப்ரியலா, பிரேசிலின் ஸ்டெபானி ஜோடி கோப்பை.
செப்.23: இந்திய ஹாக்கி சங்க தலைவராக முன்னாள் கேப்டன் திலிப் டர்க்கி போட்டியின்றி தேர்வு.
பெடரர் 'குட்-பை': செப். 24: சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஓய்வு. கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் 20 பட்டம், 6 முறை 'ஏ.டி.பி., பைனல்சில்' கோப்பை வென்றார்.

அக்டோபர்
அக்.15: ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய பெண்கள் அணி ஏழாவது முறையாக சாம்பியன்.
அக்.18: பி.சி.சி.ஐ., புதிய தலைவரானார் ரோஜர் பின்னி.
'சிக்சர்' கோஹ்லி: அக்.23: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியது. இதில், கடைசி நேரத்தில் 2 சிக்சர் அடித்து, வெற்றிக்கு உதவிய கோஹ்லியை துாக்கி கொண்டாடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா. இடம்: மெல்போர்ன்
அக்.29: 'சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை (21 வயது) ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன்.
அக்.30: உலக ஜூனியர் பாட்மின்டன் (ஸ்பெயின்) ஒற்றையரில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி வெள்ளி.
*பெண்களுக்கான (17 வயது) உலக கோப்பை கால்பந்து (இந்தியா) தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன்.

நவம்பர்
நவ.3: ஆசிய நாடுகளுக்கு இடையிலான செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம்.
நவ. 10: 'மிஸ்டர் 360 டிகிரி' என அழைக்கப்படும், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், ஒரே ஆண்டில் 'டி-20'யில் 50க்கும் மேல் சிக்சர் (31 போட்டி, 68 சிக்சர்) அடித்த முதல் வீரரானார்.
நவ.11: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் விவாகரத்து.
நவ.13: ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து சாம்பியன்.
நவ.21: தமிழகத்தின் ஜெகதீசன் (141 பந்தில் 277 ரன்), 'லிஸ்ட் ஏ' போட்டியில் அதிக ரன் எடுத்து உலக சாதனை.
நவ.27: ஐ.பி.எல்., பைனலில் அதிக ரசிகர்கள் வருகைக்காக ஆமதாபாத் மோடி மைதானம் 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம்.
நவ.28: 'லிஸ்ட் ஏ' கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 7 பந்தில் 7 சிக்சர் அடித்து மகாராஷ்டிராவின் ருதுராஜ் (எதிர்: உ.பி.,) உலக சாதனை.
விருது கவுரவம்: நவ.30: ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் 'அர்ஜுனா' விருது பெற்ற
வலமிருந்து, பிரக்ஞானந்தா, லக்சயா சென், ஜெர்லின், இளவேனில். இடம்: டில்லி

டிசம்பர்
டிச.1: டெஸ்ட் அரங்கில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் அதிக ரன் எடுத்த அணியானது இங்கிலாந்து (506 ரன், எதிர்: பாகிஸ்தான்).
டிச.10: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங்கை (71) முந்தி 2வது இடம் பிடித்தார் கோஹ்லி (72 சதம்).
*இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக 'தங்க மங்கை' பி.டி. உஷா தேர்வு.
*ஒருநாள் அரங்கில் குறைந்த பந்தில் (126) இரட்டை சதம் அடித்த வீரர் ஆனார் இஷான் கிஷான் (எதிரணி- வங்கதேசம், இடம்: சாட்டோகிராம்). இவர் 131 பந்தில் 210 ரன் எடுத்தார்.
ஜோஷ்னா ஜோர்: டிச.10: தேசிய ஸ்குவாஷ் தொடரில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா, சாம்பியன்.
ஹாக்கி கோப்பை: டிச. 17: ஸ்பெயினில் நடந்த 'நேஷன்ஸ்' கோப்பை ஹாக்கி முதல் சீசனுக்கான பைனலில் இந்திய பெண்கள் அணி 1-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன்.
மெஸ்சி 'மேஜிக்' : டிச.18: கத்தார் உலக கோப்பை கால்பந்து பைனலில் அர்ஜென்டினா அணி, பிரான்சை வீழ்த்தியது. கோப்பை வென்ற உற்சாகத்தில் கேப்டன் மெஸ்சி உள்ளிட்ட அர்ஜென்டினா வீரர்கள்.
டிச.23: ஐ.பி.எல்., 16வது சீசனுக்கான 'மினி' வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்தின் சாம் கர்ரானை, அதிகபட்சமாக ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
'ஹாட்ரிக்' சாம்பியன்: டிச. 17: பெங்களூருவில் நடந்த பார்வையற்றோருக்கான 'டி-20' உலக கோப்பை பைனலில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது முறையாக சாம்பியன்.
டிச.25: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றியது.
டிச. 27: ஆஸ்திரேலியாவின் வார்னர், 100வது டெஸ்டில் (எதிர்: தென் ஆப்ரிக்கா, இடம்: மெல்போர்ன்) இரட்டை சதம் விளாசிய 2வது வீரரானார்.
டிச. 29: மெல்போர்ன் டெஸ்டில் தென் ஆப்ரிக்காவை வென்ற ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.
ரிஷாப் காயம்: டிச. 30: டில்லி-டேஹ்ராடூன் நெடுஞ்சாலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், கார் விபத்தில் காயமடைந்தார்.

டாப்

பிப்.18: ரஞ்சி கோப்பையில் பீஹாரின் சகிபுல் (341 ரன், எதிர்-மிஜோரம்), அறிமுக முதல் தர போட்டியில் அதிக ரன் எடுத்து உலக சாதனை.
மார்ச்4: உலக நடை போட்டி சாம்பியன்ஷிப் (ஓமன்) 20 கி.மீ., பிரிவில் இந்திய பெண்கள் அணி வெண்கலம் வென்று வரலாறு.
ஏப்.15: நாகலாந்தின் கிரண் (162, எதிர் அருணாச்சல பிரதேசம்), சீனியர் பெண்கள் 'டி-20'ல் அதிக ரன் குவித்த இந்தியர் ஆனார்.
ஏப்.19: 'மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்' போட்டியில் (மணிப்பூர்) தங்கம் வென்ற முதல் இந்தியர் சர்பாலா.
ஜூலை10: விம்பிள்டன் டென்னிசில் சாதித்த செர்பிய வீரர் ஜோகோவிச், 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.
ஆக.3: காமன்வெல்த் விளையாட்டு (வெண்கலம்) ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியரானார் சவுரவ் கோஷல்.
ஆக.8: காமன்வெல்த் விளையாட்டு பாட்மின்டன் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென் தங்கம்.
ஆக.12: 'டி-20' கிரிக்கெட் போட்டியில் 600 விக்கெட் சாய்த்த முதல் வீரரானார் வெஸ்ட் இண்டீசின் பிராவோ.
செப்.3: அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஓய்வு. இவர், 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றார்.
செப்.24: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி ஓய்வு. இவர், 12 டெஸ்ட் (44 விக்.,), 204 ஒருநாள் (255), 68 'டி-20'யில் (56) விளையாடினார்.
நவ.21: ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் (இத்தாலி) ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன்.
டிச. 28: உலக 'ரேபிட்' செஸ் (கஜகஸ்தான்) தொடரில் இந்தியாவின் சவிதா ஸ்ரீ, வெண்கலம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement