'ஸ்மார்ட்' வாட்டர் பாட்டில்
நாம் குடிநீர் எடுத்துக்கொள்ளும் அளவை கணக்கிட 'ஸ்மார்ட் வார்ட்டர்பாட்டில்' ('ஹைடைரேட் ஸ்பார்க்') விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கான அலைபேசி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதில் நமது வயது, உடல் எடை, உயரத்தை பதிவிட வேண்டும். சரியான நேரத்திற்கு ஒருவர் நீர் குடிக்கவில்லை எனில், பாட்டிலின் கீழே உள்ள எல்.இ.டி., விளக்கு ஒளிரும். பாட்டிலை 'சார்ஜ்' செய்வது அவசியம்.
விலை: ரூ. 11,000
கலக்கல் கண்ணாடி
ரீடிங், 'கூலிங் கிளாஸ்' சேர்ந்து 'லிக்யூடு கிறிஸ்டலால்' ஆன கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் வலது புறத்தில் உள்ள சிறிய பட்டனை அழுத்தி 'ரீடிங் அல்லது கூலிங் கிளாசாக' மாற்றலாம். '320N' என பெயரிடப்பட்டுள்ள இந்த கண்ணாடிக்கு பிரத்யேகமாக செயலி தரப்பட்டுள்ளது.
இதில் தேவையான அளவு லென்சை மாற்றிக்கொள்ளலாம். 'புளூடூத்', ரீசார்ஜ் வசதிகள் இதில் உள்ளன.
விலை: ரூ. 20,000
தசை பிடிப்புக்கு தீர்வு
தசை பிடிப்பில் இருந்து மீள உதவும் கருவி விற்பனைக்கு வந்துள்ளது. இதில் உள்ள 'பேட்', பாக்சை அந்த பகுதியில் வைக்க வேண்டும். 'ஹீட்' பட்டனை அழுத்தியதும் அதிர்வுடன் கூடிய வெப்பக்காற்று செல்லும். சில நிமிடங்களில் பாதிப்பு சரியாகிவிடும். 'பாக்சை' சார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன், 3 'பேடு' தரப்படும். ஒரு 'பேடை' 20 முறை உபயோகிக்கலாம்.
விலை: ரூ. 14,000
மடிக்கும் 'டிவி'
லேப் டாப்' போல மடித்து வைக்க கூடிய ஹிடன் 'டிவி' அறிமுகமாகி உள்ளது. இதனை சுவற்றில் மாட்ட தேவையில்லை. 'ரிமோட் ஆன்' செய்தால் 'டிவி' வெளியே வரும்.
இதன் அடிப்பகுதி அலுமினியத்தால் ஆனது. இது 165 இன்ச் அளவு கொண்ட உலகின் முதல் மைக்ரோ எல்.இ.டி., 'டிவி'.
'சி சீடு' நிறுவனம் தயாரித்துள்ள இதில் ஐந்து எச்.டி.எம்.ஐ., பாயின்ட்கள் உள்ளன.
விலை: ரூ. 1.5 கோடி
பொம்மை... புதுமை
'ஹகிமால்ஸ்' நிறுவனம், இரண்டு கிலோ எடை உள்ள கரடி பொம்மையை உருவாக்கி உள்ளது. இதனை கட்டியணைத்தால், அதுவும் கட்டியணைப்பதை போன்ற உணர்வை அளிக்கும். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை தரும்.
விலை: ரூ. 15,000
டிரைவர் இல்லா 'டிரக்'
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த 'கேடக்' நிறுவனம் டிரைவர் இல்லாத 'டிரக்கை' தயாரித்துள்ளது. 'டிரக்' செல்லக்கூடிய இடம், செல்லும் பாதை இதில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். அமெரிக்காவில் டிரைவர்கள் தட்டுப்பாடு அதிகம் இருப்பதால், இந்த முயற்சியில் இறங்கி உள்ளனர். தற்போது 'வால்மார்ட்' நிறுவனத்தின் கோடவுனில் இருந்து அதன் சூப்பர் மார்க்கெட்டிற்கு இந்த 'டிரக்' பயன்படுத்தப்படுகிறது.
விவசாயிக்கு 'நண்பன்'
விவசாய நிலத்தை ஆராயும் 'ரோபோ' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர், உரத்தேவை, களைகளை இது கண்டறிந்து 'லேப்டாப்பிற்கு' அனுப்பும். இதன் அடிப்படையில் விவசாயம் செய்யலாம். பிரிட்டனில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் விரைவில் வர உள்ளது.
ஒன்றில் 'இரண்டு'
அமெரிக்காவின் முன்ஜாய் நிறுவனம் புதுமையான 'ஷூ'வை தயாரித்துள்ளது. இதை செருப்பாகவும் பயன்படுத்தலாம். 'ஷூ' அணிந்திருக்கும்போது கால் விரல்களை மறைப்பதற்கு ஒரு பாகம் தரப்பட்டிருக்கும்.
செருப்பாக மாற்ற நினைத்தால், இதை மட்டும் எடுத்து பாதத்தின் அடியில் மாட்டிக்கொள்ளலாம். பஞ்சு, சணல், பாசி, கரும்பு சக்கையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பதால், கால்களில் கிருமி தொற்று ஏற்படாது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!