வானில் அதிசயம்
ஜூன்25: புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி என ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்தன.
பிரபஞ்ச ரகசியம்
ஜூலை13: 1380 கோடி ஆண்டுக்கு முன் இருந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை 'நாசா' அனுப்பிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, வண்ணப் படம் எடுத்து அனுப்பியது.
நிலவு சட்டை ஏலம்
ஜூலை27: 1969, ஜுலை ௨௧ல் இரண்டாவதாக நிலவில் காலடி வைத்த எட்வின் ஆல்ட்ரினின் (அமெரிக்கா) சட்டை ரூ.22.37 கோடிக்கு ஏலம்.
வேகமாக சுற்றிய பூமி
ஜூலை29: பூமி தன்னைத்தானே சுற்ற 23 மணி நேரம், 56 நிமிடம், 4 வினாடி தேவைப்படும். முதன்முறையாக 1.59 மில்லி வினாடி முன்னதாக சுற்றியது. இதற்கு முன் 2020 ஜூலை 19ல் 1.47 வினாடி முன்னதாக சுற்றியிருந்தது.
புதிய ராக்கெட்
ஆக.7: இஸ்ரோவிடம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உள்ளன. இதில் 1000 கிலோவுக்கு மேலான செயற்கைக்கோளை தான் அனுப்ப முடியும். எடை குறைந்த (500 கிலோ) செயற்கைக்கோள் அனுப்ப எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்டை இஸ்ரோ தயாரித்தது. 2 செயற்கைக்கோளுடன் செலுத்தப்பட்ட இதன் முதல் பயணம் தோல்வியில் முடிந்தது.
திசை மாறிய விண்கல்
செப்.26: 'டிமோர்போஸ்' விண்கல்லை தாக்க விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியது. இது வெற்றிகரமாக மோதியதால் விண்கல் சுற்றுப்பாதை ஒரு சதவீதம் மாறியது. பூமியை தாக்குவது தவிர்க்கப்பட்டது.
அதிக எடை
அக்.23: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி, மாக் III வகை எல்.வி.எம்3 ராக்கெட் மூலம், பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. வணிக ரீதியிலான இந்த ராக்கெட், முதன்முறையாக 6000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை ஏந்தி சென்றது.
மீண்டும் நிலவு
நவ.16: நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்காக 'ஆர்டெமிஸ் 1' ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை 'நாசா' அனுப்பியது. இது நிலவின் மேற்பரப்பு அருகே சென்றது. டிச. 11ல் பூமிக்கு திரும்பியது.
துளிகள்
பிப்.14: பி.எஸ்.எல்.வி., - சி52 ராக்கெட்டில், புவி கண்காணிப்புக்கான 'இ.ஓ.எஸ். 04' செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஏப்.15: எதிரி ஏவுகணைகளை தானாக இடைமறித்து அழிக்கும் 'அயர்ன் பீம்' லேசர் ஏவுகணை தடுப்பு தொழில் நுட்பத்தை இஸ்ரேல் சோதித்தது. ஒருமுறை சோதிக்க ரூ. 270 கோடி செலவு.
ஏப்.16: சீனாவின் புதிய விண்வெளி மையத்தில் 6 மாதம் தங்கி ஆய்வு செய்த மூன்று வீரர்கள் பூமிக்கு திரும்பினர்.
மே2: சனி கோளில் உள்ள 82 நிலவுகளில் ஒன்றான 'டைட்டனில்' பூமியை போன்ற அம்சங்கள் இருப்பதாக கண்டுபிடிப்பு.
அக்.2: 2013, நவ., 5ல் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலத்தின் பணிக்காலம் நிறைவு.
செப்.26: பூமிக்கு அருகே 59 ஆண்டுகளுக்குப் பிறகு (59 கோடி கி.மீ.,) வியாழன் வந்தது. பொதுவாக இவ்விரு கோள்களுக்கு இடையே உள்ள துாரம் 96 கோடி கி.மீ.,
நவ.19: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம் -எஸ்', ஏவப்பட்டது.
நவ.27 : பிரபஞ்சத்தின் கருந்துளையிலிருந்து வரும் ஒளிக் கற்றைகளின் எதிரொலியை, ஒலி வடிவமாக மாற்றி நாசா சாதனை.
நவ.30: அமெரிக்காவின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் முதல் விமான இன்ஜினை சோதித்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!