Load Image
Advertisement

2022ல் நடந்த வணிக நிகழ்வுகள்

பிப்.1: மத்திய பட்ஜெட் தாக்கல்.
பிப்.25: தேசிய பங்குச்சந்தை ஊழலில் அதன் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன் கைது.
பிப்.28: பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் (செபி) முதல் பெண் தலைவராக மாதவி புரி புச் பதவியேற்பு.
பிப்.26: எல்.ஐ.சி., நிறுவனத்தில் 20 சதவீத அன்னிய முதலீடுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
மார்ச்6: தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில், அதன் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் கைது.

மார்ச்12: வருங்கால வைப்பு நிதி (2021 - 2022 ) வட்டி விகிதம் 8.50ல் இருந்து 8.10 சதவீதமாக குறைப்பு.
மார்ச்14: ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியாக டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் நியமனம்.
மார்ச்18: தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல்.
மார்ச்20: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல். விவசாயிகள் இலவச மின் திட்டத்துக்கு ரூ. 5157 கோடி ஒதுக்கீடு.
மார்ச்23: இந்திய ஏற்றுமதி வர்த்தகம் (2021-22) ரூ. 30 லட்சம் கோடியை எட்டி சாதனை.
ஏப்.2: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வரியற்ற பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.
மே1: ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி, வருமானம் அதிபட்சமாக ரூ. 1.67 லட்சம் கோடியை எட்டி சாதனை.
மே4: ரெப்போ வட்டி விகிதத்தை 4.40 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியது.
மே12: ஏர் இந்தியா சி.இ.ஓ., வாக காம்பெல் வில்சன் பதவியேற்பு.
மே17: பங்குச்சந்தையில் எல்.ஐ.சி., பங்கு (ஒன்று ரூ. 872) பட்டியலிடப்பட்டது.
மே20: கனடாவில் 'மெர்சிடஸ் - பென்ஸ் 300 எஸ்.எல்.ஆர்.' கார்(1955 மாடல்) அதிக தொகைக்கு (ரூ. 1100 கோடி) ஏலம் போனது.
ஜூன்24: மும்பை பங்குச்சந்தை (பி.எஸ்.இ.,) தலைவராக எஸ்.எஸ்.முந்த்ரா பதவியேற்பு.
ஜூன்24: 'நிடி ஆயோக்' தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் அய்யர் பதவியேற்பு.
ஜூன்27: மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவராக நிதின் குப்தா பதவியேற்பு.
ஜூன்28: ரிலையன்ஸ் ஜியோ தலைவரானார் ஆகாஷ் அம்பானி.
ஜூலை4: சென்னை முதலீட்டாளர் மாநாட்டில், ரூ. 1.25 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
ஜூலை18: தேசிய பங்குச்சந்தை தலைமை செயல் அதிகாரியாக ஆசிஷ் குமார் சவ்கான் பதவியேற்பு.
ஜூலை22: சென்னையில் 25 ஆண்டாக செயல்பட்ட அமெரிக்காவின் போர்டு நிறுவன தொழிற்சாலை மூடப்பட்டது.
ஆக.30: 'புளூம்பெர்க் பில்லியனர்' உலக பணக்காரர் வரிசையில் மூன்றாம் இடம் பெற்றார் இந்தியாவின் கவுதம் அதானி. சொத்து மதிப்பு ரூ. 11.40 லட்சம் கோடி.
அக்.1: இந்தியாவில் '5ஜி' தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அக்.19: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு (83) வரலாறு காணாத சரிவை சந்தித்தது.
அக்.22: 'ரிலையன்ஸ் நிறுவனம் '5ஜி' சேவையை தொடங்கியது.
அக்.27: 'டுவிட்டர்' நிறுவனத்தை அமெரிக்காவின் எலான் மஸ்க் ரூ. 3.5 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தினார்.
நவ.2: டுவிட்டரில் ப்ளூ டிக் கணக்குகளுக்கு மாதம் ரூ. 660 கட்டணம் விதிக்கப்படும் என அறிவிப்பு.
நவ.16: 'நிடி ஆயோக்' நிரந்த உறுப்பினராக அர்விந்த் விர்மானி நியமனம்.
நவ.17: 'மெட்டா' நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதன் பதவியேற்பு.
நவ.30: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 63 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
நவ.30: சில்லறை வர்த்தகத்துக்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement