தமிழகம்
டிச.2: ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் அலைபேசிக்கு தடை.
டிச.3: மாற்றுத்திறனாளி மாத ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ. 1500ஆக உயர்வு.
டிச.5: கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை (டர்பைன் சுழலி) சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியது.
*உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக (நீதிபதிக்கு முன் செல்பவர்) லலிதா நியமனம்.
டிச.6: கவர்னர் மாளிகையில் முதன்முறையாக அம்பேத்கர் சிலை திறப்பு.
டிச.10: யாழ்ப்பாணம் - சென்னை இடையே விமான சேவை மீண்டும் துவக்கம்.
வாரிசு உதயம்: டிச.14: இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி பதவியேற்பு.
டிச.15: தமிழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் துவக்கம்.
டிச.16: நலத்திட்ட உதவி, மானியம் பெற ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவிப்பு.
டிச.17: நரிக்குறவர் பிரிவினரை எஸ்.டி., பட்டியலில் சேர்க்கும் சட்ட மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றம்.
டிச.19: முன்னாள் மாணவர் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' திட்டம் துவக்கம்.
இந்தியா
டிச.1: 'ஜி-20' நாடுகளின் தலைமை பொறுப்பை ஓராண்டுக்கு இந்தியா ஏற்றது.
டிச.3: தேசிய புள்ளியியல் தலைவராக ராஜிவா லக்ஷ்மன் பதவியேற்பு.
டிச.4: தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணைய தலைவராக ஹன்ஸ்ராஜ் கங்காரம் பதவியேற்பு.
டிச.5: உலகின் நீளமான (3.14 கி.மீ.,) இரண்டடுக்கு பாலம் (மெட்ரோ ரயில், சாலை) அமைத்து நாக்பூர் மெட்ரோ ரயில் நிறுவனம் கின்னஸ் சாதனை.
டிச.7: டில்லி மாநகராட்சியை (250), ஆம் ஆத்மி (134 இடம்) முதன்முறையாக கைப்பற்றியது.
டிச., 8: உ.பி., மெயின்புரி லோக்சபா இடைத்தேர்தலில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் வெற்றி.
டிச.11: ஹிமாச்சல் முதல்வராக சுக்விந்தர் சிங் சுஹூ (காங்.,) பதவியேற்பு.
*உபி.,யின் வாரணாசியில் புனரமைக்கப் பட்ட பாரதியார் நினைவு இல்லத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கினார்.
டிச.12: குஜராத் முதல்வராக பா.ஜ.,வின் பூபேந்திர படேல் பதவியேற்பு.
டிச. 12: குஜராத் சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை (156) பெற்று, தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியை பிடித்து பா.ஜ., சாதனை. பிரதமர் மோடி, தொண்டர்கள் கொண்டாடினர்.
அக்னி ஏவுகணை: டிச.17: ஒடிசாவில் 5500 கி.மீ., துாரம் சென்று தாக்கும் 'அக்னி' ஏவுகணை முதன்முறையாக இரவில் சோதனை.
டிச.21: இந்தியாவில் மூன்று பேருக்கு உருமாறிய 'பிஎப். 7' கொரோனா பாதிப்பு.
*'நாக்' கமிட்டியின் 'ஏ' கிரேடு (3.85 மதிப்பெண்) அந்தஸ்து பெற்றது பஞ்சாபின் குருநானக் தேவ் பல்கலை. இதற்கு முன் லட்சுமி பாய் தேசிய உடற்கல்வி பல்கலை (3.79 மதிப்பெண்) பெற்றிருந்தது.
முதல் மியூசியம்: டிச.21: இந்தியாவின் முதல் காலாட்படை அருங்காட்சியம் ம.பி.,யின் இந்துாரில் திறப்பு.
வீர மரணம்: டிச.23: சிக்கிமின் ஜெமா மலைப்பகுதியில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 16 வீரர்கள் மரணம்.
டிச.25: பாரத் பயோடெக் தயாரித்த மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு (ஐனோவாக்) மத்திய அரசு அனுமதி.
டிச.27: அனைத்து வார்டிலும் நுாலகம் அமைத்த, இந்தியாவின் முதல் சட்டசபை தொகுதியானது கேரளாவின் தர்மடம்(கண்ணுார்).
உலகம்
டிச.1: சீன முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் 96, காலமானார்.
டிச.7: பெரு அதிபராக டினரா பொலரேட் பதவியேற்பு.
'டைம்' கவுரவம்: டிச.8: அமெரிக்காவின் 'டைம்' இதழ், உலகின் சிறந்தவராக உக்ரைன்
அதிபர் ஜெலன்ஸ்கியை தேர்வு செய்தது.
டிச.14: ஐ.நா., தலைமை அலுவலகத்தில் முதல் முறையாக மகாத்மா காந்தி சிலை திறப்பு.
டிச.15: நியூசிலாந்தில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்க தடை.
டிச.17: அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வராத்கர் பதவியேற்பு.
டிச.22: சுலேவேனியா அதிபராக நாடசா பிரிக் பதவியேற்பு.
டிச.25: நேபாள பிரதமராக புஷ்ப கமல் தாஹல் பதவியேற்பு.
டிச.26: பிஜி பிரதமராக சிதிவேனி ராபுகா பதவியேற்பு.
டிச. 29: அமெரிக்காவில் பனி சூறாவளியால் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது.
*வங்கதேசத்தின் முதல் மெட்ரோ ரயில் சேவை, தலைநகர் தாகாவில் துவக்கம்.
டாப் 4
டிச.9: வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
டிச.18: திருமதி உலக அழகி பட்டத்தை இந்தியாவின் சர்கம் கவுஷல் வென்றார்.
டிச.18: இந்திய படையில் போர்க்கப்பல் 'ஐ.என்.எஸ்., - மர்மகோவா' சேர்ப்பு. நீளம் 535 அடி. வேகம் மணிக்கு 56 கி.மீ.
டிச.21: காஷ்மீரில் பானிகல் - கத்ரா இடையே இந்தியாவின் நீளமான சுரங்க ரயில்பாதை (12.89 கி.மீ.,) பணி நிறைவு.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!