தமிழகம்
செப்.5: உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் துவக்கம்.
ஒற்றுமை யாத்திரை: செப்.7: கன்னியாகுமரி - காஷ்மீர் வரை (150 நாள், 3570 கி.மீ., துாரம்) 'பாரத் ஜோடோ' (இந்திய ஒற்றுமை) யாத்திரையை காங்., எம்.பி., ராகுல் தொடங்கினார்.
செப்.14: பள்ளி மாணவர்களை நல்வழிப் படுத்தும் 'சிற்பி' திட்டம் துவக்கம்.
செப்.15: அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கினார்.
செப்.16: மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்க முடிவு.
செப்.21: அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமிக்கு ஆதரவாக 2532 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பு.
செப்.22: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக ராஜா பதவியேற்பு.
செப்.30: ரூ. 1100 கோடி முதலீட்டில் ஸ்மார்ட்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தைவான் தொழிற்சாலை செங்கல்பட்டில் துவக்கம்.
இந்தியா
செப்.2: கப்பல்படைக்கு புதிய கொடி அறிமுகம்.
கடல் காவலன்: செப்.2: உள்நாட்டில் தயாரான இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் 'ஐ.என்.எஸ்.விக்ராந்த்' கப்பல்படையில் சேர்ப்பு. நீளம் 860 அடி, வேகம் மணிக்கு 52 கி.மீ.
புதிய பாதை...: செப்.8: டில்லியில் இந்தியா கேட் - ராஷ்டிரபதி பவன் வரை 2 கி.மீ., துாரம் புதுப்பிக்கப்பட்ட 'கர்தவ்யா பாதை' (ராஜ்பாத்), நேதாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ரப்பர் அணை: செப்.10: பீஹாரில் பல்கு நதியின் குறுக்கே, ரப்பரால் கட்டப்பட்ட இந்தியாவின் நீளமான (1400 அடி) அணை திறப்பு.
செப்.11: ராஜ்யசபா நியமன எம்.பி.,யாக காஷ்மீரில் உள்ள குஜ்ஜார் முஸ்லிம் பிரிவின் குலாம் அலி முதன்முறையாக தேர்வு.
*கப்பல்படையில் உள்நாட்டில் தயாரான தாராகிரி போர்க்கப்பல் சேர்ப்பு.
செப்.14: கோவாவில் 8 காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., வில் சேர்ந்தனர்.
*டில்லியில் பிரதமர் மோடி - பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்ஜியேல் வாங்கங் சந்திப்பு.
செப்.16: இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை எழுதிய 'அம்பேத்கரும், மோடியும்' புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.
சீறிய சிவிங்கிகள்: செப்.17: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிகளை மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார் பிரதமர் மோடி.
செப்.19: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பா.ஜ., வில் சேர்ந்தார்.
முதல் முறை: செப்.19: இந்தியாவின் முதல் லித்தியம் அயான் பேட்டரி தொழிற்சாலை, ஆந்திராவின் திருப்பதியில் துவக்கம்.
செப்.20: காஷ்மீரில் 23 ஆண்டுகளுக்குப்பின் 'மல்டி பிளக்ஸ்' தியேட்டர் திறப்பு.
செப்.25: சண்டிகர் விமான நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயர் சூட்டப்பட்டது.
செப்.26: காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், 'ஜனநாயக சுதந்திர கட்சியை' துவக்கினார்.
செப்.28: உ.பி.,யின் அயோத்தியில் உள்ள சாலை ஒன்றுக்கு மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் பெயர் சூட்டப்பட்டது.
*மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணி நியமனம்.
செப்.29: திருமணமாகாத பெண்களும் சட்டப்பூர்வ கருக்கலைப்பு (24 வாரம்) செய்ய உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
செப்.30: குஜராத்தின் காந்திநகர் - மும்பை இடையே 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0' ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கினார். மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும்.
முப்படை தளபதி: செப்.30: இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக, அனில் சவுகான் பதவியேற்பு.
உலகம்
செப்.5: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியா வருகை.
செப்.6: பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்பு.
*கனடாவுக்கான இந்திய துாதராக சஞ்சய் வர்மா பதவியேற்பு.
செப்.7: பிரிட்டனில் உள்துறை அமைச்சராக சுயெல்லா பிரேவர்மேன் நியமனம்.
செப்.13: கென்ய அதிபராக வில்லியம் டூடோ பதவியேற்பு.
செப்.16: உஸ்பெகிஸ் தானின் சமர்கண்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பு.
செப்.27: இத்தாலியின் முதல் பெண் பிரதமராக பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் ஜியார்ஜியா மெலோனி தேர்வு.
செப்.29: செனகல் நாட்டின் இந்திய துாதராக டிங்கர் அஸ்தனா பதவியேற்பு.
டாப் 4
செப்.10: பிரிட்டன் மன்னராக இரண்டாம் சார்லஸ் 74, பதவியேற்பு.
செப்.27 : ஜப்பானில் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபே நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு.
செப்.27: வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பும் நடைமுறை உச்சநீதிமன்றத்தில் அமலானது.
செப்.28: சவுதி பிரதமராக இளவரசர் முகமது பின் சல்மான் பதவியேற்பு.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!