'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், அதன் 7 சீட்டர் எஸ்.யு.வி., கார்களான ஜி.எல்.பி., மற்றும் மின்சார இ.க்யு.பி., ஆகிய இரண்டு கார்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார வகை என மூன்று வகை கார்களையும், பென்ஸ் ஒரே நேரத்தில் இந்தியாவில் களமிறக்கியுள்ளது இதுவே முதல் முறை.
ஜி.எல்.பி.,
ஜி.எல்.பி., கார், பிரத்யேகமான எடை குறைவான ஸ்டீலால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும், காரின் 72 சதவீத வெளிப்புற கட்டமைப்பு, மிக அதிக வலிமையான ஸ்டீல் பேனல்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் சிறப்பம்சமே, கரடுமுரடான இடங்களில் செல்வதற்காகவே ஆப் ரோடு டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது தான். சீறிப் பாயும் இன்ஜின் பவர் மற்றும் ஏ.பி.எஸ்., ஆகியவை காரின் செயல்திறனை அதிகரிக்கிறது.
பெட்ரோல் வகையில் 'ஜி.எல்.பி., 200', டீசல் வகையில் 'ஜி.எல்.பி., 220டி' மற்றும் 'ஜி.எல்.பி., 220டி 4எம்' என, மூன்று வகைகளில் இந்த கார் வெளியாகிறது. காரின் வகையைப் பொறுத்து விலை, 63.8 லட்சம் முதல் 69.8 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இ.க்யு.பி.,
கடந்த அக்டோபரில், இ.க்யு.எஸ்., மின்சார காரை பென்ஸ் அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது அதன் மூன்றாவது மின்சார காரான 'இ.க்யு.பி., 300-4 மேட்டிக்' எஸ்.யு.வி., காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
பின்புற ஆக்ஸிலில் பொருத்தப்பட்டு இருக்கும் இரு சக்திவாய்ந்த மோட்டார்கள், காரின் பாய்ச்சலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த கார், அதிநவீன வெப்ப மேலாண்மை திறன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், காரின் செயல்திறன் உயர்வது மட்டுமல்லாமல்; பாதுகாப்பையும் அதிகரிக்கிறது.
இ.க்யு.பி., 300 - 4 மேட்டிக் காரின் விலை 74.5 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜி.எல்.பி., விபரக் குறிப்பு
கார் வகை - ஜி.எல்.பி., 200 - ஜி.எல்.பி., 200டி - ஜி.எல்.பி., 200டி 4 மேட்டிக்இன்ஜின் - 1332 சி.சி., பெட்ரோல் - 1950 சி.சி., டீசல் - 1950 சி.சி., டீசல்ஹார்ஸ் பவர் - 165 பி.எஸ்., - 192 பி.எஸ்., - 192 பி.எஸ்.,டார்க் - 250 என்.எம்., - 400 என்.எம்., - 400 என்.எம்.,டாப் ஸ்பீடு - 207 கி.மீ., - 220 கி.மீ., - 220 கி.மீ.,1 - 100 கி.மீ., பிக்_அப் - 9.1 விநாடிகள் - 7.7 விநாடிகள் - 7.6 விநாடிகள்
இ.க்யு.பி.,விபரக் குறிப்பு
பேட்டரி - 66.5 கி.வாட்ரேஞ்ச் - 388 கி.மீ., - 423 கி.மீ.,ஹார்ஸ் பவர் - 228 பி.எஸ்.,டார்க் - 390 என்.எம்.,டாப் ஸ்பீடு - 160 கி.மீ.,1 - 100 கி.மீ., பிக்_அப் - 8 விநாடிகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!