'ஜென் மொபிலிட்டி' எனும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம், 'மேக்ஸி பாட்' எனும் நான்கு சக்கர எம்.பி.வி., வாகனம் மற்றும் 'மைக்ரோ பாட்' எனும் 3 சக்கர வாகனம் என இரு வாகனங்களை வடிவமைத்துள்ளது.
மேக்ஸி பாட் பயணியர் மற்றும் சரக்கு வாகனமாகவும், மைக்ரோ பாட் சரக்கு வாகனமாகவும் தயாரிக்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களை, 2023ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜென் மொபிலிட்டி நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான நமித் ஜென் கூறியதாவது:
நகரங்களுக்குள் சரக்கு போக்குவரத்து மற்றும் தொலைதுார பகுதிகளுக்கு வினியோகம் உள்ளிட்டவற்றில் இருக்கும் கஷ்டங்கள் மற்றும் சவால்களைக் கண்டறிந்து, இந்த இலகு ரக மின்சார வாகனங்களை வடிவமைத்துள்ளோம். சிறந்த செயல்திறன், பாதுகாப்பு, நல்ல ஆயுள், குறைந்த செலவு என பல்வேறு பயன்களை தரும் அளவிற்கு தயாரிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!