டி.வி.எஸ்., நிறுவனம், அதன் புதிய அப்பாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி., என்ற வெள்ளை நிற 'சிறப்பு எடிஷன்' பைக்கை வெளியிட்டு உள்ளது.
இந்த சிறப்பு எடிஷன் பைக், ஏற்கனவே கறுப்பு நிறத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.
கிட்டத்தட்ட 48 லட்சம் அப்பாச்சி வாடிக்கையாளர்களைக் கொண்ட டி.வி.எஸ்., இந்த பைக்கில் குறைந்த எடை கொண்ட, 'ஸ்போர்ட்டி லுக்' கொடுக்கும் 'புல்பப்' எனும் புதிய மப்ளரை எக்ஸாஸ்ட்டில் பொருத்தியுள்ளது. இதனால் பைக்கின் எடை 1 கிலோ குறைவது மட்டுமல்லாமல், உறுமும் எக்ஸாஸ்ட் சத்தத்துடன், இன்ஜினின் செயல்திறனையும் அதிகரிக்கச் செய்து உள்ளது.
கூடுதலாக அட்ஜஸ்டபிள் கிளட்ச், டூயல் டோன் சீட்டுகள், கறுப்பு மற்றும் சிவப்பு கலந்த 'அலாய்' சக்கரங்கள் என மற்ற அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் விலை1.30 லட்சம் ரூபாயாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விபரக் குறிப்பு
இன்ஜின் - 159.7 சி.சி., ஆயில் கூல்டு, பியுயல் இன்ஜெக்ஷன்
ஹார்ஸ் பவர் - 17.55 பி.எஸ்.,
டார்க் - 14.73 என்.எம்.,
மைலேஜ் - 45 கி.மீ.,
டாப் ஸ்பீடு - 114 கி.மீ.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!