'ஓபன்' மின்சார பைக் நிறுவனம், அதன் 'ரோர்' மின்சார பைக்கை, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வினியோகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், புதுடில்லி ஆகிய மாநிலங்களில், இந்த பைக்கை விற்பனை செய்ய உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டே மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் அளவிற்கு, மிக வேகமான 15 ஆம்பியர் 'சார்ஜிங் போர்ட்' கொடுக்கப்பட்டு உள்ளது. செயல்திறனை பொறுத்த அளவில், 80 கி.மீ., வேகம் வரை அதன் பிக்-அப் சீறிப் பாய்வதாகவும் கூறப்படுகிறது.
இந்த பைக்கின் விலை1.25 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விபரக் குறிப்பு
பேட்டரி - 4.4 கி.வாட்
ரேஞ்ச் - 200 கி.மீ.,
ஹார்ஸ் பவர் - 14 பி.எஸ்.,
டார்க் - 62 என்.எம்.,
டாப் ஸ்பீடு - 100 கி.மீ.,
0 - 40 பிக்_அப் - 3 விநாடிகள்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!