இனியவளே... கைவேலைப்பாடுகளால் ஆன பொருட்களில் மனம் தொலைப்பவளா நீ; இவையனைத்தும் திருநெல்வேலி மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகள்!
தேவர்குளத்தில் இருந்து பனை ஓலைப் பொருட்கள் - மணமக்கள் உருவம் பொறித்த பத்தமடை பட்டுப்பாய்கள் - அம்பாசமுத்திரத்தில் இருந்து குழந்தைகளுக்கான தைலமர சூப்பிக்கட்டை, தொட்டில் கம்பு, தேர் உள்ளிட்ட கடைசல் பொருட்கள் - உடல் உறுத்தாத பருத்தியிலான புதுக்குடி கைத்தறி புடவைகள் மற்றும் வண்ணமிகு ஜெடிபுட்டா புடவைகள்...
களக்காடு தயாரிப்பான கற்றாழை/ வாழை நார்களிலான மேஜை விளக்கு, தொங்கும் விளக்கு, - ஓர் அடி முதல் ஐந்து அடி வரையிலான வாகைகுளம் பித்தளை குத்து விளக்குகள் - ஓவியம் மிளிரும் அகல் விளக்கு, குளிர்பதனப்பெட்டி உள்ளிட்ட காருகுறிச்சி மட்பாண்ட பொருட்கள் - கரண்டிகள், காபி மக் உள்ளிட்ட கொண்டாநகரத்து தேங்காய் ஓடு படைப்புகள் -- திருவேங்கடநாதபுர சணல் கைப்பைகள், பர்ஸுகள், பூந்தொட்டிகள்...
இவற்றோடு சேரன்மகாதேவி ஓவியங்கள் - காணி பழங்குடியினர் சேகரிப்பான மலைத்தேன், மிளகு உள்ளிட்ட 40க்கும் மேலான இயற்கை உணவுப்பொருட்கள்...
இயற்கையோடு இணைந்து வாழும் ஆசை உண்டெனில் இவைகளை அள்ளி அணைத்துக் கொள்ளடி பெண்ணே!
- நெல்லை கிராப்ட்ஸ்,
திருநெல்வேலி.93425 42951
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!