வெயில் படாமல் இருப்பதால், சமீப ஆண்டுகளில் எப்படி 'விட்டமின் டி' குறைபாடு அதிகம் பேரை பாதித்து உள்ளதோ, அது போன்று தினமும் 'பாலிஷ்' செய்த அரிசியை சாப்பிடுவதால், பெரும்பாலானவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு துத்தநாக நுண்ணுாட்டச் சத்து குறைபாடு உள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்திய உணவுகளை தினமும் சாப்பிடும் பழக்கம், எந்த அளவு ஆரோக்கிய கேடோ, அதைப் போன்று தான் பாலிஷ்' செய்யப்பட்ட வெள்ளை நிறத்தில் உள்ள அரிசியை சாப்பிடுவதும்.
பார்ப்பதற்கு வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும்; சமைத்த சாதம் மல்லிகைப் பூ போல கண்களை பறிக்க வேண்டும் என்பதற்காக, நெல்லை பல முறை பாலிஷ் செய்து, நெல்லின் மேற்புறத்தில் உள்ள தோல், உமி முழுதுமாக நீக்கப்படுகிறது.
இதனால் நார்ச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் நீங்கி, வெறும் மாவுச் சத்து மட்டும் மிஞ்சுகிறது.
ஒரு நாளில் நான்கு வேளை, தினமும் வெள்ளை அரிசி சாதம் சாப்பிட்டால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
- 'அமெரிக்கன் காலேஜ் ஆப் கார்டியாலஜி!'
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!