வாலான் சம்பா பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மலையாங்குளம் கிராமத்தைச்சேர்ந்த இயற்கை பெண் விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:
பாரம்பரிய ரகத்தில், வாலான் சம்பா நெல்லும் தனி ரகமாகும். இது, 140 நாளில் விளைச்சல் தரக்கூடியது.
நெல் மஞ்சள் நிறத்திலும், அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும், அரிசியின் நுணி வால் போன்று காணப்படும். இந்த ரக நெல், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவ காலங்களிலும் சாகுபடி செய்யலாம். குறைந்த தண்ணீரே, பாசனத்திற்கு போதுமானது. ஒரு ஏக்கர் நிலத்தில், 30 நெல் மூட்டைகள் வரையில், மகசூல் பெறலாம். இதை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யலாம்.
இந்த அரிசி இனிப்பு சுவையுடன் இருப்பதால், பல வித பலகாரங்களை செய்து கொடுக்கலாம். இந்த அரிசி, ரத்தம் விருத்தி செய்யும் குணம் உடையது. பூப்படைந்த பெண்கள், கருவுற்ற பெண்கள், குழந்தை பெற்ற பெண்களுக்கு ஏற்ற ரக நெல் என்றே கூறலாம்.
பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களை சரி செய்யும் தன்மை இந்த ரக அரிசிக்கு உள்ளது. இதை உணவாக எடுத்துக்கொள்ளும் போது, பல வித நோய்களை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: என்.மகாலட்சுமி
98414 42193
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!