Load Image
Advertisement

கூடுதல் பழ மகசூலுக்கு பூங்கதலி வாழை

பூங்கதலி வாழை பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கரும்பூர் கிராமத்தைச்சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது: எங்களுக்கு சொந்தமான நிலத்தில், பூங்கதலி வாழை சாகுபடி செய்துள்ளேன். இது, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக சாகுபடி செய்யும் ஒரு ரகமாகும்.

இந்த செடிகளை நட்டு, பாசனம் மற்றும் உர நிர்வாகம் முறையாக கையாண்டால், எட்டு மாதங்களில் அறுவடைக்கு வரும். பூங்கதலி ரக வாழை பழம், ஏலக்கி பழ சுவை போல் இருக்கும். குறிப்பாக, பிற ரக வாழை மரங்கள் குலை தள்ளும் போது, 60 சதவீதம் மட்டுமே காய் பிடிக்கும். மீதம் இருக்கும் வாழை பூ சமையலுக்கு பயன்படுத்த வேண்டி இருக்கும்.

இந்த பூங்கதலி ரக வாழை மரத்தை பொருத்தவரையில், வாழை குலை தள்ளும் போது, 95 சதவீதம் காய்கள் பிடித்து, பழங்களாக மாறும் தன்மை உடையது. இதை, வாழை பழங்களை நேரடியாக சந்தைபடுத்தும் விவசாயிகளுக்கு, கூடுதல் வருவாய் கிடைக்க வழி வகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: கே.சசிகலா
89391 88682



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement