'பிரவைக்' என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம், 'டெபி' எனும் மின்சார எஸ்.யு.வி., காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன், பதினோரு விதமான நிறங்களில், இந்த கார் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கம்பீரமான டிசைனில், மிக பிரமாண்டமாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. காருக்குள்ளேயே வைபை வசதி, லேப்டாப் வைப்பதற்கென 15 அங்குல பலகை, 220 வோல்ட் சார்ஜிங் போர்ட், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜிங் என பல அம்சங்கள் இதில் இருக்கின்றன.
இந்த எஸ்.யு.வி., காரின் விலை, 39.50 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரின் தயாரிப்பு, அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் துவங்கப்பட்டு, வினியோகமும் செய்யப்பட உள்ளதாக பிரவைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபரக் குறிப்புபேட்டரி - 90.2 கி.வாட்ரேஞ்ச் - 500 கி.மீ.,ஹார்ஸ் பவர் - 406 பி.எஸ்.,டார்க் - 620 என்.எம்.,0-100 கிமீ பிக்அப் - 4.9 விநாடிகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!