பெட்ரோல் செலவை 25 சதவீதமும், சி.என்.ஜி., செலவை 29 சதவீதமும் குறைக்கும் தொழில்நுட்பம் கொண்ட சக்தி வாய்ந்த இன்ஜினுடன் கூடிய 'ஈக்கோ' வேனை வெளியிட்டுள்ளது 'மாருதி சுசூகி' நிறுவனம். இந்த வாகனம், வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த வேன், '5 இருக்கைகள், 7 இருக்கைகள், கார்கோ, டூர், ஆம்புலன்ஸ்' என மொத்தம் 13 வகைகளில் வெளியாகிறது. கூடுதலாக, இரண்டு பாதுகாப்பு காற்று பைகள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதி, ரிவர்ஸ் சென்சார் என 11க்கும் மேற்பட்ட அம்சங்களும் இதில் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த ஈக்கோ வேனின் விலை, 5.10 லட்சம் ரூபாயிலிருந்து துவங்குகிறது.
விபரக் குறிப்புகார் வகை - பெட்ரோல் வகை - சி.என்.ஜி., வகை
இன்ஜின் - 1.2 லிட்டர், கே சீரிஸ், டுயல் ஜெட், டுயல் வி.வி.டி., - 1.2 லிட்டர், கே சீரிஸ், டுயல் ஜெட், டுயல் வி.வி.டி
ஹார்ஸ் பவர் - 80.76 பி.எஸ்., - 71.65 பி.எஸ்.,டார்க் - 104.4 என்.எம்., - 95 என்.எம்.,மைலேஜ் - 20.20 கி.மீ., - 27.05 கி.மீ.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!