'போர்ஸ் மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'அர்பனியா' பயணியர் வேனை, இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. இந்த வாகனம், 10, 13 மற்றும் 17 இருக்கைகள் என மூன்று வகைகளில் களமிறக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சமே, அதன் வடிவமைப்பு தான். அதாவது, ஆப்ரிக்கா, தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா என, கண்டங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டு உள்ளது தான்.
இதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், பிரத்யேகமான 'மாட்யுலர் மோனோகாக்' உருவாக்கு தளத்தில் இந்த வேன் உருவாக்கப்பட்டுள்ளது.
காரில் இருப்பது போன்ற எளிமையான 'டில்ட்' மற்றும் 'டெலிஸ்கோபிக்' ஸ்டியரிங், ஏ.பி.எஸ்., ஈ.பி.டி., சார்ஜிங் போர்டுகள், புரொஜெக்டர் ஹெட் லாம்ப்கள் என பல்வேறு அம்சங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அர்பனியா வேனின் விலை, அதன் வகையை பொறுத்து, 28.99 லட்சம் ரூபாய் முதல் ஆரம்பமாகிறது.
விபரக் குறிப்புஇன்ஜின் - 2.6 லிட்டர் டர்போஹார்ஸ் பவர் - 118 பி.எஸ்.,டார்க் - 350 என்.எம்.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!