'மேட்டர் எனர்ஜி' என்ற நிறுவனம், இந்தியாவின் முதல் 4 கியர் கொண்ட மின்சார பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக், மூன்று வகைகளில் வர உள்ளதாகவும், ஏப்ரல் 2023ல் வெளியிட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் லிக்விட் கூல்டு பேட்டரி, டூயல் சேனல் ஏ.பி.எஸ்., ஆகிய அம்சங்கள் கொண்ட முதல் மின்சார பைக்காகவும் விளங்குகிறது.
அத்துடன், 7 அங்குல எல்.சி.டி., டிஸ்ப்ளே, நேவிகேஷன், ஹாண்டில் பாரில் கியர் மாற்றும் வசதி, சார்ஜிங் போர்ட், பைக் திருடப்பட்டால் கண்டறியும் வசதி, சாவி இல்லாமல் 'டார்ட்' செய்யும் வசதி என, எண்ணற்ற வசதிகள் இந்த பைக்கில் இருக்கின்றன.
இதன் விலை 1.75 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விபரக் குறிப்புபேட்டரி 5 கி.வாட்ரேஞ்ச் 125 _ 150 கி.மீ.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!