உள்நாட்டு ஆடியோ சாதன தயாரிப்பு நிறுவனமான 'போட்', அண்மையில் புதிதாக 'போட் ஏர்டோப்ஸ் ஆட்டம் 81' எனும், 'ட்ரூ ஒயர்லெஸ்' இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.
இது ஒரு பட்ஜெட் இயர்பட்ஸ். இருப்பினும், அடிப்படையாக தேவைப்படும் அனைத்து வசதிகளுடன் வந்துள்ளது.
இசை கேட்க, அழைப்புகளை ஏற்க மட்டுமின்றி; 'கேமிங்'கின் போதும் சிறப்பான ஆடியோவை இது வழங்குகிறது.
இதிலிருக்கும் நான்கு 'மைக்ரோபோன்' அமைப்பு, தொலைபேசி அழைப்புகளை, துல்லியமானதாக மாற்றுகிறது.
'டச் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
'சார்ஜிங் கேஸ்' உடன் சேர்த்து, மொத்தம் 50 மணி நேரம் வரை தாங்கும் வகையில், இதன் பேட்டரி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 'டைப் சி' சார்ஜிங் இடம்பெற்றுள்ளது. வெறும் 5 நிமிட சார்ஜிங்கில், 60 நிமிடங்கள் பயன்படுத்தலாம்.
விலை: 1,299 ரூபாய்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!