'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், புதிதாக ஒரு 'பிரீமியம் சவுண்டுபாரை' இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
'ஜெப்ரானிக்ஸ் ஜெப் ஜூக் பார் 9750 புரோ' எனும் பெயரில், இந்த சவுண்டுபார் அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த சவுண்டுபாரில் ஐந்து ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று முன்பகுதியிலும், இரண்டு மேற்பகுதியிலும், இடம்பெற்றுள்ளன.
அத்துடன், மிகவும் சக்திவாய்ந்த 15.5 செ.மீ., சப்வூபரும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஒயர்லெஸ் இணைப்பு வசதி கொண்ட இரண்டு 'ரியர் சாட்டிலைட் ஸ்பீக்கர்'களும் உள்ளன.
'டால்பி அட்மோஸ்' சப்போர்ட் வசதியுடன், 525 வாட் ஆடியோவை இந்த சவுண்டுபார் வழங்குகிறது.
இதனால் சிறப்பான 'ஹோம் தியேட்டர்' அனுபவத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
விலை: 22,999 ரூபாய்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!