சீனாவில், இளவயதினர் 'வீடியோ கேம்' அடிமைகளாக மாறுவதை தடுக்க, கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சிகள், தற்போது நல்ல பலனை வழங்கி உள்ளது.
சீனாவில், பெரும்பாலான இளவயதினர், வீடியோ கேம்களில் அதிகம் ஈடுபட்டு வந்தது, பெரிய பிரச்னையாக உருவெடுத்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில், சீனா அரசு, 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள், ஒரு வாரத்தில், மூன்று மணி நேரத்துக்கு கூடுதலாக வீடியோ கேம் விளையாடக்கூடாது என புதிய கட்டுப்பாடை விதித்தது.
வீடியோ கேம் விளையாட்டு ஒரு போதையாக மாறி, இளம் வயதினரை அடிமைப்படுத்தி விடுவதை தடுக்கவே, இந்த கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்படுவதாக அரசு அறிவித்தது.
இருப்பினும், ஒரு மாத காலத்தில், இந்த விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, கட்டுப்பாட்டு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, தங்கள் விளையாட்டை எப்போதும் போல் தொடர்ந்தனர், இளவயதினர்.
இதையடுத்து, கூடுதல் கண்காணிப்புடன், விதிகளை கடுமையாக்கி, ஓட்டைகள் அடைக்கப்பட்டன.
தற்போது இளவயதினரில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர், வாரம் மூன்று மணி நேரத்துக்கும் குறைவாகவே விளையாடுகின்றனர்.
இது தீவிரமான நடவடிக்கைகளுக்கு கிடைத்த பரிசு என்றும்; இந்த பலனை பெறுவதற்கு, 'கேமிங்' நிறுவனங்கள் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, 'டென்சென்ட் ஹோல்டிங்ஸ், நெட் ஈஸ், பெர்பெக்ட் வோர்ல்டு' ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பு வெகுவாக பாரட்டப்பட்டு உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!