இது மழைக் காலம்; குளிரும் அதிக அளவில் இருக்கிறது. இது போன்ற சமயங்களில், நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பருவத்தில், செரிமான மண்டலத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை கணிப்பது சிரமம். சில நேரங்களில் ஆரோக்கியமாக இருக்கும்; சில நேரங்களில் பிரச்னைகள் வரும். சில சமயங்களில் நன்றாகப் பசிக்கும்; சில நேரங்களில் பசி தெரியாது.
நன்றாக பசிக்கிற நேரத்திலும், வழக்கமாக சாப்பிடும் அளவை விடவும், குறைந்த அளவு உணவையே சாப்பிட வேண்டும்.
இரண்டாவது விஷயம், ஒவ்வாமை பிரச்னைகள், மூட்டுகளில் வலி, குளிர் காலத்தில் அதிகம் ஏற்படும். இவற்றை தவிர்க்க, வாதத்தை அதிகரிக்கும் வாழைப்பழம் மற்றும் உருளைக் கிழங்கு, நிலக்கடலை போன்ற பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள் சாப்பிடுவதை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது. அப்படியே சாப்பிட்டாலும் மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.
குளிர், மழைக் காலத்தில் சமைக்கும் எல்லா உணவுகளிலும், மிளகு சேர்த்து சமைப்பது அவசியம். புளித்த மோர், தயிர், எலுமிச்சை உட்பட சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ள பழங்கள், புளி இவற்றையும் தவிர்க்க வேண்டும்.
சிலருக்கு சாப்பிட்டவுடன் 'ரிப்ளெக்ஸ்' எனப்படும் எதுக்களிப்பு வரலாம்.
அதிகாலையில் எழுந்ததும், நிறைய தண்ணீர் குடிப்பது அல்லது நாள் முழுதும் இத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து, கவனமாக தண்ணீர் குடிப்பது இந்த பருவத்தில் தவிர்க்க வேண்டிய விஷயம். எல்லா நேரத்திலும் வெதுவெதுப்பான நீரையே குடிக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர், செரிமானத்திற்கும், உடம்பில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.
டாக்டர் எம்.ஹரிகிருஷ்ணன்,
ஆயுர்வேத மருத்துவர், சென்னை.
80159 58409
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!