வெள்ளை சர்க்கரையை 'சல்பர்' எனப்படும் வேதிப் பொருள் கொண்டு சுத்திகரிப்பு செய்வதால், அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தற்போது சல்பரை பயன்படுத்தி, சுத்திகரிக்கப்படாத வெள்ளைச் சர்க்கரை கிடைக்கிறது; அதை தேவையான நேரத்தில் உபயோகிக்கலாம்.
சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம், நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி பயன்படுத்துவதே ஆரோக்கியம் என்ற பிரசாரம், சமீப ஆண்டுகளில் அதிகமாக செய்யப்படுகிறது. நாம் அனைவரும் நினைப்பது போல, சர்க்கரைக்கு மாற்று வெல்லம் என்பதெல்லாம் கிடையாது.
நம்முடைய பாரம்பரிய உணவில், எப்படி அந்தந்த பருவத்திற்கு ஏற்ப சர்க்கரையையும், வெல்லத்தையும் பயன்படுத்தினரோ, அது தான் ஆரோக்கியம்.
இப்போது மழை, குளிர் காலம். இந்த காலம் முழுதும், உடல் வெப்பத்திற்காகவும் எளிதாக செரிமானத்திற்கும் உதவும் வகையில், கடலைப் பருப்பு, வெல்லம் சேர்த்து போளி, எள், வெல்லம் சேர்த்து எள் உருண்டை, கருப்பட்டி சேர்த்த லட்டு வகைகள், வெல்லம், தேங்காய் அல்லது பருப்பு பூர்ணம் வைத்து செய்யப்படும் பலவித உணவுகள், கம்பு தோசை செய்து சாப்பிடுவர்.
அதே போன்று, வெயில் காலத்தில், சர்பத், டீ, காபி, பல வகையான கஞ்சி... இவற்றில் சர்க்கரை சேர்த்துக் கொள்வர். இது போல அந்தந்த பருவ நிலைக்கு ஏற்ப, சர்க்கரை அல்லது வெல்லத்தை தேவையான அளவு மட்டும் சாப்பிடுவதே ஆரோக்கியமானது.
-ருஜுதா திவேகர்,
நியூட்ரிஷனிஸ்ட், மும்பை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!