தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
புழுங்கல் அரிசி - 250 கிராம்
உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, துவரம் பருப்பு - தலா 1 மேஜைகரண்டி
காய்ந்த மிளகாய் - 5
இஞ்சி, உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவற்றை நீரில் ஊற வைக்கவும். ஊறிய பின், இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து அரைக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு கலக்கவும். இதை அடையாக வார்த்து எடுக்கவும். சுவை மிக்க, 'தக்காளி அடை' தயார். தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிடலாம்!
- டி.சக்தி ஷிவானி, விருதுநகர்.
தொடர்புக்கு: 82202 12189
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!