என் வயது, 71; நீண்ட காலமாக சிறுவர்மலர் வாசித்து வருகிறேன். கால் மூட்டு வலி காரணமாக, அதிகம் வெளியே செல்வதில்லை. இதனால் சிறுவர்மலர் இதழ், 'உங்கள் பக்கம்!' பகுதியில் வருவது போல் படங்கள் வரைந்து நேரத்தை செலவிடுகிறேன்.
அங்குராசு பகுதியில், அறிவியல் செய்திகளை படித்து, என் பேரன் மனதில் பதிய வைப்பேன். பள்ளி பருவ நிகழ்வுகளை அசைப் போட்டு, மகிழ உதவுகிறது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. சுவை தரும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி புதிய உணவுகளை அள்ளித் தருகிறது.
'இளஸ்... மனஸ்...' பகுதி, மனதை சமப்படுத்துகிறது. மொத்தத்தில், அனைவரின் மனம் கவரும், வண்ணங்களுடன் மலர்ந்து மணம் வீசுகிறது, சிறுவர்மலர்!
- என்.வெங்கட்ராமன், தேனி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!