'ஹோண்டா கார்ஸ்' நிறுவனம், டபுள்யு.ஆர் - வி., எனும் அதன் பழைய சப் காம்பாக்ட் எஸ்.யூ.வி., காரை, புதிதாக உருமாற்றம் செய்து, காட்சிப்படுத்தியுள்ளது. தற்போது இந்த காரை இந்தோனேஷியாவில் வெளியிட்டு உள்ளது, இந்த நிறுவனம். இந்தியாவில் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய டபுள்யு.ஆர் - வி., கார், பழைய மாடல் காரை விட வடிவில் பெரிதாக உள்ளது. மேலும், பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தி, பல தொழில்நுட்ப மாற்றங்களையும் இந்த புதிய காரில் ஹோண்டா கொண்டுவந்துள்ளது.
தற்போது சந்தையில் இருக்கும் 'டாடா நெக்சான், ஹூண்டாய் வென்யு, மாருதி சுசூகி பிரீஸ்ஸா' ஆகிய கார்களுடன் இந்த கார் போட்டி போடுகிறது.
விபரக் குறிப்பு
இன்ஜின் - 1.5 லிட்டர், ஐ.வி டெக் பெட்ரோல்
ஹார்ஸ் பவர் - 121 பி.எஸ்.,
டார்க் - 145 என்.எம்.,
பூட் ஸ்பேஸ் - 380 லிட்டர்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!