'லம்போர்கினி' நிறுவனம், அதன் 'உருஸ் பெர்பார்மனேட்' எனும் எஸ்.யு.வி., ரேஸ் காரை, இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
ரேஸ் டிராக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கென, தற்போது சந்தையில் இருக்கும் உருஸ் காரில் பயன்படுத்தப்படும் ஏர் சஸ்பென்ஷனுக்குப் பதிலாக, புதிய உருஸ் காரில், 'காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி, மிரட்டும் முன்பக்க பம்பர், காற்றை எளிதாக கிழித்து கொண்டு செல்லும் வகையில், முன் மற்றும் பின் பகுதிகளில் கூலிங் வென்ட்டுகள் என, சில டிசைன் மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
இந்த காரின் விலை, 3 முதல் 4 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விபரக் குறிப்பு
இன்ஜின் - 4 லிட்டர், வி. 8 இன்ஜின்
ஹார்ஸ் பவர் - 670 பி.எஸ்.,
டார்க் - 850 என்.எம்.,
1 - 100 கி.மீ., பிக்கப் - 3.3 விநாடிகள்
டாப் ஸ்பீடு - 305 கி.மீ.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!