'கவாஸாகி' பைக் நிறுவனம், 'நிஞ்சா 650' பைக்கின், 2023ம் ஆண்டு மாடல் பைக்கை, இந்தியாவில் வெளியிட்டு உள்ளது. இது ஒரு கவர்ச்சியான ஸ்போர்ட்ஸ் பைக்.
முந்தைய மாடல் பைக்கின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் சறுக்காமலும், வழுக்காமலும் இருக்க, இரண்டு நிலை 'டிராக் ஷன் கன்ட்ரோல்' அமைப்பு, முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இந்த அமைப்பை 'ஸ்விட்ச் ஆப்' செய்யும் வசதியையும் கவாஸாகி கொடுத்து உள்ளது.
பழைய நிஞ்சா 650 பைக்கை ஒப்பிடும்போது, இதன் விலை, 17 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 7.12 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விபரக் குறிப்பு:
இன்ஜின் - 649 சி.சி., பாரலல் டுவின் இன்ஜின்
ஹார்ஸ் பவர் - 70 பி.எஸ்.,
டார்க் 64 - என்.எம்.,
0 - 100 கி.மீ., பிக்கப் - 3.92 விநாடிகள்
டாப் ஸ்பீடு - 212 கி.மீ.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!