மூன்றாம் தலைமுறை 'கே 10 ஆல்டோ' காருக்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அந்த காரை தற்போது சி.என்.ஜி., வகையில் களமிறக்கியுள்ளது, 'மாருதி சுசூகி' நிறுவனம்.
சந்தையில் தற்போது விற்பனையாகி வரும் 'ஆல்டோ கே 10' காரில் இருந்து இம்மி அளவு கூட மாற்றம் செய்யாமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த சி.என்.ஜி., கார். இதன் மைலேஜ், 33.85 கி.மீ., என அறிவிக்கப்பட்டு உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த காரின் விலை, பெட்ரோல் கே 10 ஆல்டோ காரை விட, 95 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 5.95 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விபரக் குறிப்பு
இன்ஜின் - 1 லிட்டர், கே 10 சி.,
ஹார்ஸ் பவர் - 58 பி.எஸ்.,
டார்க் - 89 என்.எம்.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!