'வால்வோ' நிறுவனம், புதிதாக 'ஈ.எக்ஸ்., 90' எனும், மின்சார எஸ்.யு.வி., காரை தயாரிக்க உள்ளது.
அச்சு அசல் 'வால்வோ எக்ஸ்.சி., 90' எஸ்.யு.வி., காரை போலவே இருக்கும் இந்த காரில், 7 பேர் வரை அமரலாம்.
பாதுகாப்பில் சிறந்து விளங்கும் வால்வோ நிறுவனம், இந்த காரில், உள் மற்றும் வெளிப்புற சென்சார்கள், மேம்படுத்தப்பட்ட 'பைலட் அசிஸ்ட் மற்றும் ஸ்டீயரிங் சப்போர்ட்' வசதிகள், நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படாத வண்ணம், காரின் அதிநவீன டிரைவர் அசிஸ்டன்ஸ் தொழில்நுட்பத்திற்கு மிக உதவியாக இருக்கிறது.
மேலும், 14.5 அங்குல, செங்குத்தான 'டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, டால்பி அட்மோஸ்' தொழில்நுட்பத்துடன் கூடிய காதை கிழிக்கும் 25 ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட்போன் வாயிலாக காரை திறக்கும் வசதி என பல்வேறு அம்சங்களும் இதில் இருக்கின்றன.
காரின் விலை, 1.5 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விபரக் குறிப்பு:
கார் வகை - டுவின் மோட்டார் - ஆல் வீல் டிரைவ்
பேட்டரி - 107 கி.வாட் - 111 கி.வாட்
ரேஞ்ச் - 650 கி.மீ., - 600 கி.மீ.,
ஹார்ஸ் பவர் - 414 பி.எஸ்., - 524 பி.எஸ்.,
டார்க் - 770 என்.எம்., - 910 என்.எம்.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!