'ரூமட்டாய்டு ஆர்த்ரைடீஸ்' இருந்தால் பரிசோதிக்க வேண்டுமா?
ரூமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் எனப்படும் முழங்கால், மூட்டு வலி வந்து சிகிச்சை பெறுபவர்கள், நோயின் தன்மை குறைந்து விட்டதா என்பதை அறிய, மாதம் ஒரு முறைபரிசோதனை செய்கின்றனர்.
நோயின் தீவிரம் என்பது மருந்து சாப்பிட்டு, தேவையான சிகிச்சை எடுப்பதால், சிறிது சிறிதாக குறைந்து, நோய் கட்டுப்பாட்டிற்கு வரும்.
வலியைக் குறைக்கலாம்; மூட்டு சிதைவைக் குறைக்கலாமே தவிர, நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள், ரூமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் கோளாறை உருவாக்கும் காரணிகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே தான் இருக்கும். அதை நம்மால் தவிர்க்க இயலாது.
அதனால், தொடர்ந்து சிகிச்சை செய்தாலும் பரிசோதனை முடிவுகள் 'பாசிட்டிவ்' என்று தான் வரும்.
எனவே, உங்கள் டாக்டர் அவசியம் என்று சொன்னால் தவிர, அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டாம். இது, வெறுமனே சோதனைக் கூடங்கள் லாபம் சம்பாதிக்க மட்டுமே உதவும்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!