சூப்பரான சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரை புதிதாக இரட்டை வண்ண கலவையில் (டூயல் டோன்) களமிறக்கியுள்ளனர். ரைடு கனெக்ட் எடிஷன், ஸ்பெஷல் எடிஷன் என இரு மாடல்களில் மட்டும் சாலிட் ஐஸ் கிரீன்/பியர்ல் மிராஜ் ஒயிட் இரட்டை வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது.
எல்இடி ஹெட்லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டம், வெளிப்புறத்தில் பெட்ரோல் டேங்க் மூடி, நீளமான இருக்கை அமைப்பு, வசதியான புட்போர்டு, இருக்கைக்கு கீழே அதிக இடவசதி, யுஎஸ்பி சார்ஜர், அலாய் வீல், புளூடூத் உடன் ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 'சுஸுகி ரைடு கனெக்ட்' செயலி மூலம் மிஸ்டு கால் அலர்ட், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் செய்தி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஓவர் ஸ்பீடு வார்னிங் உட்பட பல விபரங்களை பெறும் வசதி, சைடு ஸ்டாண்ட் இன்டர்லாக், இன்ஜின் ஸ்டாப்/ஸ்டாப் ஸ்விட்ச், சஸ்பென்ஷனுக்கு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக், பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் சிறப்பம்சம்.
இதன் 124 சிசி பியூவல் இன்ஜெக்டட் இன்ஜின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
விலை (எக்ஸ்ஷோரூம்):
ஸ்பெஷல் எடிஷன்-ரூ. 87,250
ரைடு கனெக்ட் எடிஷன்-ரூ. 89,500-91,500
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!