Load Image
Advertisement

வயதை நிர்ணயிக்கும் மன உணர்வுகள்!

வயதுக்கு மீறிய தோற்றத்துடன் சிலர் இருக்கலாம்; வயதுக்கு தகுந்த இயல்பான அழகுடன் சிலர் தெரியலாம்; தோற்றத்தை வைத்து என்ன வயது இருக்கும் என்று கணிக்க முடியாத அளவிற்கும் சிலர் இருப்பதைப் பார்க்கிறோம்.

இந்த வயதில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பொதுவான நியதி ஏன் இல்லை? மனதில் ஏற்படும் உணர்வுகள் தான் காரணம் என்று ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

எந்த நேரமும் தனிமையில் இருக்கும் உணர்வு, மனதில் மகிழ்ச்சியே இல்லாமல் இருப்பது, மன அழுத்தம் போன்ற உணர்வுகள் உடலையும், மனதையும் விரைவாக முதிர்ச்சியடைய வைக்கும். இது மட்டுமல்ல... பொறாமை, எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகளும், உடலின் ஒவ்வொரு செயலையும் வெகுவாக குழப்பமடையச் செய்கின்றன.

நம் அனைவரிடமும் வயதைச் சொல்லும் பிறப்பு சான்றிதழ் இருக்கும். இதற்கும், உடம்பில் இயல்பாக நடக்கும் உயிரியல் மாற்றத்திற்கும், நிறைய வேறுபாடுகள் உள்ளன. நம் உடலின் உள்ளுறுப்புகள் எப்படி வேலை செய்கின்றன என்பதைப் பொறுத்தது. இதற்கு அடிப்படை காரணம் வாழ்க்கை முறை.

நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினமும் சீரான உடற்பயிற்சி, தினசரி ஒழுங்கு முறைகளில் நேர்த்தி இருந்தால், உடலின் உள்செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.

நம்மில் பெரும்பாலானவர்கள், சான்றிதழில் இருக்கும் வயதை விட ஐந்து - 10 வயது அதிகமான தோற்றத்தில் இருப்பதற்கு மனதும், உடலும் ஒரே நேர்க்கோட்டில் இல்லாமல் இருப்பது தான் காரணம். மனதளவில் நாம் இளமையாக உணர்ந்தால் அது உடலளவில், தோற்றத்தில் மிகப் பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அனுபவம், சுற்றுப்புறம், வாழ்க்கை முறை, தினசரி சந்திக்கும் பிரச்னைகள், பொறுப்புகள் இவற்றைத் தாண்டி, இளமையாக மனதை வைத்திருப்பது சவாலான விஷயம் தான். முயன்றால் முடியும். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், ஒரே வயதில் இருக்கும் இந்த பழக்கம் இல்லாதவர்களை விடவும், வயதான தோற்றம் தரும்.

- ஹாங்காங் பல்கலைக்கழகம், சீனா.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement