இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் அம்சங்களுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டெல்த் எடிஷன் 2.0 பைக் அறிமுகமாகியுள்ளது. 'ஹீரோ கனெக்ட்' வசதி புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புளூடூத் மூலம் அலைபேசியை இணைத்து, பைக் இருக்கும் இடத்தை 'லைவ்' ஆக 'டிராக்' செய்யலாம். நிர்ணயித்த 'ஸ்பீடு லிமிட்டை' தாண்டினால் 'அலர்ட்' கொடுக்கும். இதன் காரணமாக திருடர்கள் கைவரிசை காட்ட முடியாது. கருப்பு வண்ணத்தில் சிவப்பு நிற அலங்காரங்கள் உடன் கலக்கலாக உள்ளது.
எல்இடி ஹெட்லேம்ப், எல்சிடி டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஸ்போர்ட்டி வடிவமைப்பு, யுஎஸ்பி சார்ஜர், டிஸ்க் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங், சஸ்பென்ஷனுக்கு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் 7 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், யுஎஸ்பி சார்ஜர், கலக்கல் டிசைனில் கைப்பிடிகள், சிங்கிள் சீட் சிறப்பம்சம்.இதன் 163 சிசி ஏர் கூல்டு இன்ஜின், 15.2 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். 0--60 கி.மீ., வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டும்.
விலை: ரூ. 1.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!