ஆடம்பர பிரியர்களுக்காக மெர்சிடிஸ் பென்ஸ் இகியூஎஸ் 580 4மேடிக் எலக்ட்ரிக் கார் அறிமுகமாகியுள்ளது.
இதில் பெரிய 107.8 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரி பேக், இரு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை 523 பிஎச்பி பவரையும், 855 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மணிக்கு அதிகபட்சம் 210 கி.மீ., வேகத்தில் பறக்கும். 0-100 கி.மீ., வேகத்தை 4.3 வினாடிகளில் எட்டும். 200 கிலோவாட் பாஸ்ட் சார்ஜர் மூலம் 31 நிமிடங்களில் 10-80 சதவீதம் சார்ஜ் ஏற்றலாம். இது தான் இந்தியாவில் சிங்கிள் சார்ஜில் அதிக துாரம் செல்லும் கார். ஒரு முறை சார்ஜ் செய்தால் 857 கி.மீ., துாரம் பயணிக்கலாம்.
டிஜிட்டல் எல்இடி ஹெட்லேம்ப், இன்போடெயின்மென்ட் சிஸ்டம் அடங்கிய பெரிய 56 இன்ச் ஹைப்பர் எம்பியூஎக்ஸ் ஸ்கீரின், பின் இருக்கை பயணிக்கு 7 இன்ச் டேப்ளட், ஆம்பியன்ட் லைட்டிங், மசாஜ் வசதியுடன் இருக்கைகள், பாதுகாப்புக்கான 'யூரோ என்சிஏபி' கிராஷ் டெஸ்டில் முழுமையான 5 ஸ்டார் ரேட்டிங், லேன் கீப் அசிஸ்ட், 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பனோரமிக் சன்ரூப், வெல்வட் புளோர் மேட், மல்டி லெவல் ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிறப்பம்சம்.
விலை: ரூ. 1.55 கோடி (எக்ஸ்ஹோரூம்)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!