Load Image
dinamalar telegram
Advertisement

'ஜொலிக்கும்' செல்டோஸ்

அசத்தலான கியா நிறுவன கார்களுக்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது. 2021, செப்டம்பரில் 14,441 கியா கார்கள் விற்பனையாகின. இது 2022, செப்டம்பரில் 25,857 ஆக அதிகரிக்க, 79.1 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்டியது. இதில் செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்யூவி., தான் அதிகம்(11,000) விற்பனையாகியுள்ளது.

செல்டோஸ் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்டெட் செயலி, எலக்ட்ரிக் சன்ரூப், ஆட்டோமேட்டிக் 'ஏசி' சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா என நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

பிஎஸ்-6 தரத்திலான 1.5 லிட்டர் பெட்ரோல் (115 பிஎச்பி பவர், 144என்எம் டார்க் திறன்), 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல்(140 பிஎச்பி பவர், 242 என்எம் டார்க் திறன்), 1.5 லிட்டர் டீசல் (115 பிஎச்பி பவர், 250 என்எம் டார்க் திறன்) என மூன்று இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
விலை: ரூ.10.49-18.65 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement