வீட்டில் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள்; வீடு பாதுகாப்பாக உள்ளதா என்பதை எல்லாம், வீட்டுக்கு வெளியிலிருந்தாலும் எளிதாக அறியும் வகையில், கேமரா கண்காணிப்புக்காக 'எக்ஸ்சேப்' எனும் சாதனத்தை, 'ஏர்டெல்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
'வைபை' அடிப்படையில் செயல்படும் இந்த கேமரா சாதனத்தை, வீட்டில் தேவையான இடத்தில் பொருத்திவிட்டு, உலகில் எங்கிருந்தாலும், சட்டைப் பையிலிருக்கும் ஸ்மார்ட்போன் வாயிலாக கண்காணித்துக் கொள்ள இயலும்.
முதற்கட்டமாக, சென்னை உள்ளிட்ட 40 முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பல மாடல்களில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த சாதனங்களின் விலை, 2,499 ரூபாயிலிருந்து துவங்குகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!