Load Image
dinamalar telegram
Advertisement

ரவுத்திர வீணை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,

மகனோட சிகிச்சைக்காக அரியலுாரை விட்டு சென்னைக்கு வந்து 19 ஆண்டுகளாயிருச்சு. இயன்முறை மருத்துவ கல்வியாளரா 17 ஆண்டுகள் வேலை பார்த்தவனுக்கு, 2003ம் ஆண்டுல சிறுநீரக பாதிப்பு; 2012ம் ஆண்டு கண்பார்வையும் போயிருச்சு!

கடந்த 10 ஆண்டுகளா நிறைய உடல் உபாதைகள். அவனால எழுந்து நடமாட முடியாது. 17 ஆண்டுகளா 'டயாலிசிஸ்' பண்ணி அவனை காப்பாத்திட்டு வர்றேன். மாதம் 50 ஆயிரம் ரூபாய் சிகிச்சைக்கு செலவாகுது! அரியலுார் சிமென்ட் ஆலையில பணியாற்றி ஓய்வு பெற்ற கணவருக்கு வந்த பணம், வீடு/ நிலம் விற்ற காசு எல்லாம் கரைஞ்சிருச்சு!

இந்த சூழல்ல, 2021 மார்ச் 8ம் தேதி, '100 சதவீதம் கண் பார்வையற்றவர்'னு 'அடையாள அட்டை: 64979'ம், சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கையொப்பமிட்ட பாஸ் புத்தகமும் கிடைச்சது. மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 'இ-சேவை' மையத்துக்குப் போனா, 'உங்க வங்கி விபரங்களை வைச்சு விண்ணப்பிக்க முடியாது'ன்னு சொல்றாங்க. உடல்நலமில்லாத மகனை கூட்டிட்டு அலைய முடியலை!

உதவித்தொகை வாங்கவே இவ்வளவு போராட்டமே இருக்கே... என் மகனுக்கு மருத்துவ உதவி கேட்டா செய்வீங்களா?

- உடல்நலம் குன்றிய 45 வயது மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவித்தொகை, சிசிச்சை கோரும் 63 வயது தாய் கமலம், சூளைமேடு, சென்னை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement