நம்மூர் மது கடைகளுக்கும், அயல்நாட்டு மது கடைகளுக்கும் நிறைய வித்தியாசமிருக்கும். அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உள்ள இந்த மதுக்கடையை பார்த்தால், மது அருந்தாதவர்கள் கூட, சற்று சபலப்படக் கூடும். அந்த அளவுக்கு விசாலமாக, சுத்தமாக, நேர்த்தியாக விதவிதமான மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
உயர்ந்த சரக்கான இவை, ஒவ்வொரு பாட்டிலும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளவை. படத்தில் இருப்பவர், தன் கையில் வைத்திருப்பது உயர் ரக வோட்கா. இதில், 6 லி., வோட்கா நிரப்பப்பட்டுள்ளது.வோட்கா மற்றும் பாட்டில் எல்லாம் சேர்த்து மொத்தம், 10 கிலோ எடையுள்ளது. இதன் விலை, பல லட்சம் ரூபாய். அதேபோல், 'மெக்லென்' என்ற, உயர்ரக விஸ்கி பாட்டில் விலை, 6.25 லட்ச ரூபாய்.உலகில் உள்ள உயர் ரக மது வகைகள் அனைத்தும் இங்கு கிடைக்கும். தங்க துகள் கலந்த விஸ்கிக்கு ஏக, 'டிமாண்டு' உள்ளதாம்.நம்மூர், 'டாஸ்மாக்' குடிமகன்கள் எல்லாம், துாரத்திலிருந்து பார்த்து, ஏங்க வேண்டியது தான்.
— ஜோல்னாபையன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!