அக்டோபர் 2, மகாத்மா காந்தி பிறந்த நாள்.
மகாராஷ்டிரா மாநிலம், புனா, எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் காந்திஜி. ஒருநாள் சிறை அதிகாரி, அவரை காண வந்திருந்தார். செருப்பு அணிந்தபடி அறைக்குள் சென்று பேசினார். அதிகாரி சென்றதும், அந்த அறையை கழுவ ஆரம்பித்தார் காந்திஜி. அங்கிருந்த நண்பர் இதற்கான காரணம் கேட்டார்.
நிதானமாக, 'அதிகாரி செருப்பில் இருந்த அழுக்கு, அறையில் படிந்து விட்டது. எனவே தான், அறையைக் கழுவுகிறேன்...' என்றார் காந்திஜி.'அதிகாரி, அறைக்குள் நுழைவதற்கு முன், செருப்பை கழற்றி விட்டு வரும்படி கூறி இருக்கலாமே...' என்றார் நண்பர்.
'நான் அவ்வாறு கூறியிருந்தால், அதிகாரி மனம் புண்பட்டிருக்கும். எனவே தான் கூறவில்லை. இந்த அறையை கழுவுவதற்கு, இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டேன்...' என்றார் காந்திஜி.காந்திஜியின் பெருந்தன்மையைக் கண்டு வியந்தார் நண்பர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!