Load Image
dinamalar telegram
Advertisement

அற்புதமான 'ஜூபிடர்'

நவீன அம்சங்கள் நிறைந்த டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டருக்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது. 2013ல் அறிமுகமானது. இதுவரை 50 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாட, புதுப்பொலிவுடன் ஜூபிடர் கிளாசிக் வேரியன்ட் அறிமுகமாகியுள்ளது. மிஸ்டிக் கிரே, ரீகல் பர்பிள் வண்ணம், கருப்பு வண்ண மிரர், டின்டட் வைசர், 3டி லோகோ, டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஸ்டைலான பிரீமியம் லெதர் இருக்கை, பேக்ரெஸ்ட் பேட் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளன.

தவிர, எல்இடி ஹெட்லேம்ப், ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க். பின்புறத்தில் 3 ஸ்டெப் அட்ஜெஸ்ட் செய்யும் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்ஸ், மெட்டல் பாடி, ஆல் இன்ஒன் லாக், வெளிப்புற பெட்ரோல் டேங்க் மூடி, ஈசி சென்டர் ஸ்டாண்ட் வசதி, யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டியூப்லெஸ் டயர்கள், கிக்ஸ்டார்ட்/எலக்ட்ரிக் ஸ்டார்ட், டிரம்/டிஸ்க் பிரேக், சின்கரனைஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம்.

இதன் பிஎஸ்-6 தரத்திலான 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர், பியூவல் இன்ஜெக் ஷன் இன்ஜின், 7.8 பிஎச்பி பவரையும், 8.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

விலை : ரூ. 90,000 (எக்ஸ்ஷோரூம்)



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement