சவாலான விலையில் கவாஸாகி டபிள்யூ 175 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. எபோனி பிளாக், கேண்டி பெர்சிமன் ரெட் என இரு வண்ணங்களில் கிடைக்கும்.
வட்ட வடிவ ஹாலோஜன் மல்டி ரெப்ளக்டர் ஹெட்லேம்ப், 17 இன்ச் ஸ்போக் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், சிங்கிள் பீஸ் சீட், செமி டிஜிட்டல் ரெட்ரோ ஸ்டைல் ஸ்பீடோமீட்டர், குறைவான எடை(135 கிலோ), சஸ்பென்ஷனுக்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க்குகள், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள், டிஸ்க்/டிரம் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம்.
இதன் 177சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 13 பிஎச்பி பவரையும், 13.2 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். வண்ணங்களின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலை (எக்ஸ்ஷோரூம்)
எபோனி பிளாக்- ரூ.1.47 லட்சம்
கேண்டி பெர்சிமன் ரெட்- ரூ. 1.49 லட்சம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!