Load Image
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

* 'ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்; சாப்பிடவில்லையா' என்று முதல்வர் கேட்டதும், 'காலையில் சாப்பிடுவதே இல்லை' என்று பள்ளிக் குழந்தைகள் சொன்னதால் 'காலை உணவுத் திட்டம்' துவக்கப்பட்டதாம்; முதல்வரே... என்றாவது ஒருநாள், 'வீட்டின் வறுமைக்கு அப்பாவின் குடிப்பழக்கம் காரணமாய் இருக்கிறதா' என்றும் கேட்டு விடுங்கள்... ப்ளீஸ்!

* 'பிரதமர் மோடியின் தலைமையில், உலக நாடுகளுக்கு பல விஷயங்களில் இந்தியா முன்னுதாரணமாக விளங்குகிறது' - 'மைக்ரோசாப்ட்' பில்கேட்ஸ்; ஆனா பாருங்க... 'மாநில வளர்ச்சி கண்டு சிறுவர்கள் பெருமை கொள்ளும் பண்பை உருவாக்குவது 'சிற்பி' திட்டத்தின் நோக்கம்'னு சொல்ற நம்மாளுகளுக்கு பிரதமரை பாராட்ட மனசில்லை!

* 'குஜராத், மஹாராஷ்டிராவை விட தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் குறைவு என்பதற்காய் நான் சமாதானம் ஆக முடியாது'ன்னு தமிழக முதல்வர் கர்ஜிக்கிறார்; 'கேரளாவை விட தமிழகத்தில் மின் கட்டணம் மிகவும் குறைவு'ன்னு அமைச்சர் செந்தில் பாலாஜி சமாதானமாகுறார்; பாதிப்புல நல்லது கெட்டது வித்தியாசம் உண்டா என்ன!

* உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனப் பிரிப்பது ஆரிய மாடலாம்; இதற்கு நேரெதிரானது திராவிட மாடலாம்; இதென்ன நியாயம்; இப்போ, உறவினர் வீட்டுக்கு முதல்வர் போறதை செய்தி ஆக்குறதில்லை; அதுவே, நரிக்குறவர் வீட்டுக்கு விஜயம்னா... நேரடி ஒளிபரப்பு; 'உயர்ந்தவர், தாழ்ந்தவர் பேதமில்லா திராவிட மாடல்ல எதுக்காக இந்த விளம்பரம்?

எல்லாம் அவன் செயல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement