இந்திய நிறுவனம் ஒன்று, முதன் முதலாக, 'ஸ்மார்ட் கிளாஸ்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 'அம்பரேன்' நிறுவனம், அண்மையில், 'அம்பரேன் கிளேர்ஸ்' எனும் பெயரில், ஸ்மார்ட் கிளாஸை அறிமுகம் செய்துள்ளது.
இந்த கண்ணாடியின் பிரேமுக்குள், ஸ்பீக்கர்கள் மறைத்து வைத்து, தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் புளூடூத் வி 5.1 இணைப்பு வசதி உள்ளது. இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால், 7 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.சதுரம் மற்றும் வட்ட வடிவங்களில் இந்த ஸ்மார்ட் கண்ணாடி வந்துள்ளது. மேலும் இந்த கண்ணாடி புற ஊதா கதிர்களை தடுக்கக்கூடியது.
கண்ணாடியின் வாயிலாக, போன் அழைப்புகளை ஏற்கலாம் அல்லது, மறுக்கலாம். மியூசிக் பிளேபேக்கை கன்ட்ரோல் செய்யலாம். குரல் வழி உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.
விலை: 4,999 ரூபாய்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!