'சாம்சங்' கடந்த 10ம் தேதி 'கேலக்ஸி இசட் போல்டு 4, கேலக்ஸி இசட் பிளிப் 4' என இரு போல்டபிள் ஸ்மார்ட்போன்களையும், அத்துடன் 'கேலக்ஸி 5' ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்சையும் அறிமுகம் செய்தது.
கேலக்ஸி இசட் போல்டு 4 ஸ்மார்ட்போன், இந்தியாவில் செப்டம்பரிலிருந்து விற்பனைக்கு வருகிறது. அப்படி வரும் பட்சத்தில், இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த சாம்சங் போனாக அது இருக்கும் எனக் கருதப்படுகிறது.
உலகளவில் இந்த போல்டபிள் போன் அறிமுகம் ஆன போது, இதன் விலை, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1.42 லட்சம் ரூபாயாகும். இந்தியாவை பொறுத்தவரை இறக்குமதி வரி அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை காரணமாக, விலை இதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சாம்சங் கேலக்ஸி போல்டு 3' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது, அதன் விலை 1.49 - 1.57 லட்சம் ரூபாயாக இருந்தது. இந்த இரு ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு, வரும் 16ம் தேதி துவங்கி 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சமயத்தில் முன்பதிவு செய்வோருக்கு விலையில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!