Load Image
dinamalar telegram
Advertisement

தேங்காய் பால் ரசம்!

தேவையான பொருட்கள்:
தேங்காய் பால் - 1 கப்
துவரம் பருப்பு வேக வைத்த நீர் - 2 கப்
தக்காளி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா1
கடுகு, சீரகம், பூண்டு, மிளகு, தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, பெருங்காயத்துாள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து காய்ந்த மிளகாய், பூண்டு, பச்சை மிளகாயை நறுக்கி போடவும். சீரகம், மிளகுப் பொடியுடன், நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
பின், துவரம் பருப்பு வேக வைத்த நீர், பெருங்காயத்துாள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும். நன்கு கொதித்ததும் தேங்காய் பால் ஊற்றி இறக்கவும்.
சுவையான, 'தேங்காய் பால் ரசம்' தயார். சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.
- பி.ஜெகதீஸ்வரி, சிதம்பரம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement