என் வயது, 38; அரசு பள்ளியில், அறிவியல் ஆசிரியையாக பணிபுரிகிறேன்.
சிறுவர்மலர் இதழை எதிர்பார்த்து சனிக்கிழமைகளில் ஆவலோடு காத்திருப்பேன். காரணம், அதை என் மாணவர்களை போல் நேசிக்கிறேன்.
பள்ளியில் பெற்ற அனுபவங்களை, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில், வாசகர்கள் பகிர்ந்து வருவது உற்சாகம் தரும் விதமாக உள்ளது. மாணவ, மாணவியருக்கு முன்மாதிரியாக செயல்படும் உந்துதலை தருகிறது.
மாணவர்களிடம், நற்பண்புகள் வளர்ப்பதற்கும், ஆரோக்கியம் பேணுவதற்கும், அறிவியல் பற்றிய சுவாரசியமான தகவல்களை ஊட்டுவதற்கும், நன்னெறி கதைகள் மற்றும் துணுக்குச் செய்திகள் கூறுவதற்கும், சிறுவர்மலர் இதழ் பக்க பலமாக உள்ளது.
ஓவியங்களை, 'உங்கள் பக்கம்!' பகுதியில் வரைந்து பழகுகின்றனர் மாணவர்கள். ஓவியத் திறனை வளர்ப்பதற்கும், போட்டிகளில் பங்கேற்பதற்கும் பயிற்சி தரும் வகையில் உள்ளது இந்த பகுதி.
ஆசிரியர் - மாணவர் இடையே, நல்லுறவை வளர்க்கும் சிறுவர்மலர் இதழை வாசிப்பது பெருமிதம் தருகிறது.
- மா.கல்பனா, தர்மபுரி.
தொடர்புக்கு: 96265 87770
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!