Load Image
dinamalar telegram
Advertisement

நெல்லில் இருந்து அரிசியாக மாற்ற சிறிய இயந்திரம் கை கொடுக்கும்

நெல்லில் இருந்து அரிசியாக மாற்றும் இயந்திரம் குறித்து, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த, வீரநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணினி பட்டதாரி விவசாயி கே.பி.சின்னிபிரசன்னா கூறியதாவது:

எங்களுக்கு சொந்தமான நிலத்தில், பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்கிறேன். பாரம்பரிய நெல்லை சேதம் இல்லாமல் அரிசியாக மாற்றுவது, பல விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.இந்நெல்லை பொறுத்தவரை, அரிசியாக மாற்றி விற்பனை செய்தால் மட்டுமே, விவசாயி நல்ல வருவாய் ஈட்ட முடியம்.

பெரும்பாலான விவசாயிகளுக்கு, பாரம்பரிய ரக நெல்லை அரிசியாக மாற்றும்போதும், அவற்றை இருப்பு வைக்கும்போதும் தான் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.அதாவது ஆலையில் நெல் அரைக்கும்போது பதமாக இல்லைஎன்றால் நொய்யாக மாறிவிடும். அரைத்து வீட்டில் வைத்து விற்பதற்குள் பூச்சிகள் வந்துவிடும்.இதை தவிர்க்க, சந்தை விற்பனைக்கு ஏற்ப, இரண்டு, மூன்று நெல் மூட்டைகளை விவசாயிகள் எடுத்து சென்று அரைத்து கொள்வர்.

சில அரிசி உரிமையாளர்கள் அரைத்து கொடுக்காமல், கூடுதல் நெல் மூட்டைகளோடு காத்திருக்கும் நிலை உள்ளது.விவசாயிகளின் தேவைக்கேற்ப சிறிய ரக இயந்திரங்களை வாங்கி, நெல்லைக் கொட்டி அரிசியாக மாற்றிக்கொள்ளலாம்.இந்த இயந்திரம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். தவிர, குறைந்த விலையில் நாங்களே நெல்லை அரைத்து கொடுக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: கே.பி.சின்னிபிரசன்னா
90800 84800

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ஸ்டிக்கன் - al-kuyar,பஹ்ரைன்

    இதன் விலையையும் இங்கே கூறியிருக்கலாம்?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement